அடுத்த 3 மாதத்திற்கு இலவச ரீசார்ஜ்.. பிரதமர் மோடி வழங்கப் போவதாக பரவும் தகவல்..உண்மை என்ன?
சென்னை: பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 15 வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து குடிமக்களுக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்களை வழங்க உள்ளதாக வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை பற்றி பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படஉள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அவர்கள் ஏற்கனவே செய்த நன்மைகள் மற்றும் தீமைகளை மனதில் வைத்து யாருக்கு வாக்களிக்கலாம் என்பது மக்கள் யோசிக்கும் காலமாக இது இருக்கிறது.

அதேநேரம் நாட்டு மக்களை ஏமாற்ற மோசடியாக வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளித்தது போல் சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. குறிப்பாக பாஜகவை மையப்படுத்தி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. கவர்ச்சிகரமான அரசியல் வாக்குறுதிகள் என்று மோசடியான லிங்குகளை கிளிக் செய்ய வைத்து அதன் மூலம் மக்களின் பணத்தை திருடுவதற்கு பெரிய கூட்டமே சுற்றுகிறது.
அப்படி ஒரு மோசடியை சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிளெட் டெஸ்க் கண்டுபிடித்துள்ளது. " பாஜக இலவச ரீசார்ஜ் யோஜனா" என்று அழைக்கப்படும் திட்டத்தில் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
என்ன மோசடி: பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 15 வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து குடிமக்களுக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்களை வழங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த மோசடி தொடர்பான லிங்குகளை உண்மை என்று நம்ப வைப்பதற்காக அதனுடன் இணைந்த இணையதளம், ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட இலவச ரீசார்ஜ் பெற்றதாகக் கூறும் நபர்கள் கூறுவதாக அதில் இருக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
எப்படி மோசடி நடக்கிறது: இந்த மோசடியானது கிளாசிக் ஃபிஷிங் யுக்தியின் படி செயல்படுகிறது. எப்படி என்றால், ரீசார்ஜ் செய்ய வாட்ஸ்அப்பில் ஒரு லிங்க் வரும். அதை லிங்கை கிளிக் செய்தால் ரீசார்ஜ் ஆகும் என்று தூண்டுவார்கள். அதில் ஆசைப்பட்டு ஓடிப்போய் லிங்கை கிளிக் செய்தால், "இலவச ரீசார்ஜ் பெறுக" என்ற பாப்-அப் அவர்களுக்கு தோன்றும். அதில் அவர்கள் தங்கள் மொபைல் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தொலைபேசி எண்ணை பதிவிடுகிறார்கள்.
உடனே ரீசார்ஜ் ஆக்டிவேஷன் பக்கத்திற்கு போகும்.. ஆனால் அவர்கள் பல WhatsApp குழுக்களுக்கு இந்த மெஜேஜை பார்வேர்டு செய்தால், வெற்றிகரமாக ரீசார்ஜ் ஆகும் என்று வரும்.. ஆனால் ரிசார்ஜ் ஆகாது.. உங்களை ஏமாற்றி உங்கள் தகவல்களை திருடுவதுடன், உங்களை போலவே பலரது தகவல்களை திருடுவது தான் அந்த திட்டத்தின் நோக்கம்.. இதில் என்ன சிக்கல் என்றால், எந்த 10 இலக்க எண்ணை அடித்தாலும் ரிசார்ஜ் ஆக்டிவேஷன் பக்கத்துக்கு போய்விடும்.. அதில் லிங்கை கிளிக் செய்தால் பார்வேர்டு செய்ய சொல்லும். எனவே இந்த மோசடியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்..
எப்படி கண்டுபிடிப்பது: இதுபோன்ற மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள, இணையதள URL-ஐ கண்டிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். மோசடியான இணையதளத்தைக் குறிக்கும் சில அறிகுறிக இவை தான்: "https" என்பதற்கு பதிலாக "http" என்று இருக்கும். எஸ் சேர்ந்து இருந்தால் அது பாதுகாப்பானது. இல்லாவிட்டால் பாதுகாப்பு இல்லாத இணையதளங்கள் ஆகும்.
அதேபோல நம்பகமான இணையதளங்கள் .com, .in, .co.in, .org, .gov போன்றவற்றில் முடியும் அடங்கும். மேலும், இணையதளப் பெயரில் எழுத்துப் பிழைகளை கண்டுபிடியுங்கள் . இதில் எழுத்துப்பிழையாக இருந்தால், அது ஒரு மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது என்று கிளெட் டெக்ஸ் கூறியுள்ளது.
அதேபோல் நீங்கள் பார்க்கும் URL க்கு அருகில் ⚠️ ஐகானைக் கண்டால், உங்கள் தகவலை இணையதளத்தில் பகிர வேண்டாம், ஏனெனில் அது பாதுகாப்பானது அல்ல என்பது பொருள். அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம்.. அரசு தொடர்பான எந்த அறிவிப்பினையும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே வெளியிடும். கட்சிகளுமே அதன் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தான் எதையும் தெரிவிப்பார்கள்.. எனவே யாரோ வாட்ஸ் அப்பில பதிவிடுகிறார்கள். நண்பன் ஷேர் செய்தான் என்பதற்காக உண்மை என்று நம்பிவிடாதீர்கள்.

Fact Check
வெளியான செய்தி
பாஜக சார்பாக பிரதமர் மோடி அக்டோபர் 15 வரை மூன்று மாதங்களுக்கு அனைத்து குடிமக்களுக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்குவதாக வாட்ஸ் அப்பில் லிங்குடன் செய்தி பரவி வருகிறது.
முடிவு
பாஜக சார்பாக பிரதமர் மோடி அக்டோபர் வரை 3 மாதங்களுக்கு மக்களுக்க இலவச மொபைல் ரீசார்ஜ் எதுவும் வழங்கவில்லை. வாட்ஸ் அப்பில் பரவுவது போலியான லிங்குகள் என்பதை அறிய முடிகிறது
ரேட்டிங்
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications