மோடி சொன்னதை போல இல்லை.. தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி, அதானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளாரே!
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி தொழிலதிபர்கள் அதானி, அம்பானி பற்றி பேசாமல் மவுனம் காப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில் அது பொய் என்பதும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 25 மேடைகளில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 4 கட்ட தேர்தல் மீதமுள்ளது. 4வது கட்ட தேர்தல் என்பது வரும் 13ம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இந்த 4வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வர உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 8 ம் தேதி பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‛‛நண்பர்களே கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (மறைமுகமாக ராகுல் காந்தி) மீண்டும் மீண்டும் ஒன்றை கூறி வந்ததை கவனித்து இருப்பீர்கள். தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள் என்று பல ஆண்டுகளாக அவர் கூறி வந்தார். பிறகு அம்பானி-அதானி, அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று சொல்ல தொடங்கினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் அம்பானி-அதானி பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திவிட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் அம்பானி, அதானி பற்றி பேசவில்லை. டெம்போ நிறைய காங்கிரஸ் கட்சி பணம் பெற்றுள்ளது'' என குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தங்களின் வலைதள பக்கங்களில் தொடர்ந்து ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசி வருகிறார் என தெரிவித்து இருந்தனர்.
இதுபற்றி நாம் சோதனை செய்து பார்த்தபோது, லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் 17 முதல் மே மாதம் 8 ம் தேதி வரை ராகுல் காந்தி மொத்தம் 25 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியின் இணையதள பக்கமான யூடியூப்பில் உள்ளார். மே மாதம் தொடங்கியது முதல் 8 ம் தேதி வரை நடந்த 6 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கடந்த 6 ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‛‛அதானி என்பது பெயர். நாம் பயன்படுத்தும் தண்ணீர், வனம், நிலம் உள்ளிட்டவற்றில் அவர் கண்வைத்துள்ளார். பிரதமர் மோடி, அதானிக்காக செயல்பட்டு வருகிறார். அதானியும், பிரதமர் மோடியும் சேர்ந்து அரசியலமைப்பு புத்தகத்துக்கு முடிவுரை எழுத நினைக்கின்றனர். நம்மால் அந்த புத்தகம் இன்றி ஆட்சி செய்ய முடியாது'' என விமர்சனம் செய்திருந்தார்.
அதன்பிறகு கடந்த 7 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‛‛ நாட்டில் உள்ள உரிமைகள், வனங்கள் அனைத்தும் கோடீஸ்வரரான அதானி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றார். அதேநாளில் ரட்லம் தொகுதியில் பேசியபோது முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தை ஊடகங்கள் ஒளிபரப்பியது தொடர்பாக பேசியிருந்தார்.
இதுதவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா, டையூ டாமன் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசியிருந்தார். அதில் அதானி, அம்பானி உள்பட 25 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரோடு, காற்றாலை, மின்சாரம், தளவாட பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட ஒப்பந்தங்களை வழங்குகிறது என தெரிவித்து இருந்தனர்.
அதன்படி பார்த்தால் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கூட ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அரசு, அதானி, அம்பானிக்கும் இடையேயான தொடர்பு பற்றி பேசி வருகிறார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசவில்லை என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது உண்மைக்கு புறம்பானதாகும்.

Fact Check
வெளியான செய்தி
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசவில்லை என பிரதமர் மோடி குற்றச்சாட்டு
முடிவு
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. மார்ச் 17 முதல் மே 8 வரை 25 பொதுக்கூட்டங்களில் அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார்
ரேட்டிங்
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications