Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: போக்குவரத்து ஊழியர்களிடம் ரூ 200 கோடி கையாடலா? ஊழியரின் புகார் பொய் என மறுக்கும் MTC!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட எல்ஐசி பிரீமியம் தொகை ரூ 200 கோடி மோசடி செய்ததாக வந்த செய்தியில் உண்மை இல்லை என TN Fact Check மறுத்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் எல்ஐசி பிரீமியம் என்ற பெயரில் மாதந்தோறும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதை அதிகாரிகள் மோசடி செய்ததாக ஊழியரும் அண்ணா தொழிற்சங்க இணை செயலாளருமான துளசி தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Fact Check There is no fradulent done for MTC staffs by LIC premium amount Rs 200 crore


இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் எல்ஐசி காப்பீடுக்கு என கூறி பிடித்தம் செய்த பணத்தை எல்ஐசிக்கு செலுத்தாமல் ரூ 200 கோடிக்கு கையாடல் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சம்பள பட்டுவாடா அதிகாரி எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். என் பணத்தை ஏன் எல்ஐசிக்கு கட்டவில்லை என நிர்வாகத்திடம் கேட்டால் சஸ்பெண்ட் செய்கிறார்கள். இது எனக்கு மட்டுமில்லை, 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இது நடந்துள்ளது. நான் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் எல்லாம் வரவில்லை.

என் பணத்தை கட்டாமல் இவர்கள் கையாடல் செய்துவிட்டு இவர்கள் செய்த தவறுக்காக என் மனைவி என்னிடம் பேசி 4 மாதம் ஆகிறது. நான் ஏதோ செலவு செய்துவிட்டு எல்ஐசிக்கு பணம் கட்டியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என கண்ணீர் விட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதை தமிழக அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து TN FACT CHECK அதாவது தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ 200 கோடி எல்ஐசி பிரீமியம் தொகையை சம்பள பட்டியல் பிரிவு உதவி மேலாளர் முறைகேடு செய்துவிட்டதாக ஊடகங்களுக்கு தொழில்நுட்ப பணியாளர் பேட்டி அளித்தது பொய்.

உண்மை என்ன

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிரீமியம் தொகை 3 முதல் 4 மாத கால அவகாசத்தில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இது பற்றி தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. எல்ஐசியில் நவம்பர் 2023க்குரிய மாத சந்தா 15.04.2024 அன்று சரி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தியை நோட்டீஸ் வந்திருப்பதாக கூறி ஊடகங்களில் தொழில்நுட்ப பணியாளர் துளசிதாஸ் தவறாக காட்டியுள்ளார்.

அவரால் குற்றம்சாட்டப்பட்ட சம்பள பட்டியல் பிரிவு உதவி மேலாளரின் பணி, ஊதியத்தைக் கணக்கிடுவது மட்டுமே, பணம் செலுத்துவது அவர் பணியல்ல, இதை அறிந்தும் அவர் மீது துளசிதாஸ் குற்றம்சாட்டியுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. வதந்திகளை பரப்பாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ 200 கோடி எல்ஐசி பிரீமியம் தொகையை சம்பள பட்டியல் பிரிவு உதவி மேலாளர் முறைகேடு என ஊழியர் பேட்டி

முடிவு

இது முற்றிலும் தவறான தகவல். ரூ 200 கோடியை எல்ஐசி பிரீமியத்திற்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக ஊழியர் கூறியது வதந்தி!

ரேட்டிங்

FALSE
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+