டிரம்ப் திடீர் மரணம்? அவரது மகனின் ட்வீட்டால் பயங்கர குழப்பம்.. கடைசியில் என்னென்னு பாருங்க
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இது குறித்த உண்மையை நாம் பார்க்கலாம்.
கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அதிபர்களில் ஒருவர் என்று டிரம்பை சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். அந்தளவுக்குச் சர்ச்சைகளின் நாயகனாகவே டிரம்ப் இருந்தார்.

அவர் 2020 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அதன் பிறகும் சர்ச்சைக்கு மத்தியிலேயே இருந்தார். அங்கே கடந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு இப்போதே அவர் ரெடியாகிவிட்டார்.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். கட்சியில் அவரது செல்வாக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், மீண்டும் டிரம்ப் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. வரும் காலத்தில் டிரம்ப் தனது பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தவே போகிறார்.
டிரம்ப் உயிரிழப்பு?: இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. அவரது பக்கத்தில், "எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை கனத்த இயத்துடன் அறிவிக்கிறேன்.. அவருக்குப் பதிலாக நான் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார். அமெரிக்க நேரப்படி காலை 8.46க்கு அவர் இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.
டிரம்பின் மகனே இப்படியொரு ட்வீட்டை போட்டதால், அது சர்வதேச அளவில் மிக பெரிய பரபரப்பைக் கிளப்பியது. வெறும் சில மணி நேரத்தில் அது பல லட்சம் பார்வைகளையும் அவர் பெற்றது. டிரம்பின் மகன் கூறியது உண்மைதானா எனப் பலரும் கேள்வியையும் எழுப்ப தொடங்கினர். அந்த பின்னரே இதில் என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.
உண்மை என்ன: ட்ரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து இந்த ட்வீட் வந்திருந்தாலும் இதை அவர் பதிவிடவில்லையாம். அவரது எக்ஸ் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்திருந்த நிலையில், அவர்களே இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். இது மட்டுமின்றி ஹோக் செய்யப்பட்ட போது பல ஆட்சேபனைக்குரிய ட்வீட்களும் அதில் இருந்தன. தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் மோசமாக விமர்சிக்கும் ட்வீட்கள் இருந்தன. மேலும், வடகொரியாவுக்கு எதிரான கருத்துக்களும் இருந்தன.
இதை எல்லாம் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இறப்பு குறித்த முதல் ட்வீட் வந்து சுமார் 20 நிமிடங்கள் கழித்து இந்த போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 77 வயதான முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் சில பதிவுகளைப் பகிர்ந்தார். இடைப்பட்ட நேரத்தில் டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டு சர்ச்சை பதிவுகளும் டெலிட் செய்யப்பட்டன.

Fact Check
வெளியான செய்தி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் டிரம்ப் ஜூனியர் பதிவிட்டதால் பரபரப்பு
முடிவு
டிரம்ப் ஜூனியரின் எக்ஸ் பக்கத்தைச் சிலர் ஹேக் செய்து இதுபோல போலியாகப் பதிவிட்டுள்ளனர்.
ரேட்டிங்
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications