For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check காரே மூழ்கும் அளவுக்கு பெங்களூரில் மழையா? டிரெண்டான படம் உண்மைதானா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கார் ஒன்று வெள்ளத்தில் மூழ்குவது போன்ற வீடியோ பெங்களூர் மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பப்படுகிறது.

பெங்களூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் ரோர்டு, சில்க் போர்டு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனால் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஆயினும் டிராக்டர்களில் வேலைக்கு சென்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு வராததால் மிக அதிக அளவு நஷ்டம் ஏற்பட்டது.

Fact Check:கீழே இருக்கும் பணத்தை முண்டியடித்து சேகரிக்கும் குழந்தைகள்! வீசியடித்தது ராணி எலிசபெத்தா? Fact Check:கீழே இருக்கும் பணத்தை முண்டியடித்து சேகரிக்கும் குழந்தைகள்! வீசியடித்தது ராணி எலிசபெத்தா?

மழை நீர் வடிகால் வசதி

மழை நீர் வடிகால் வசதி


இதற்கு காரணம் இத்தனை பெரிய நகரில் மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் இல்லை என குற்றம்சாட்டப்பட்டது. சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரில் குண்டு குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் காட்சிகளும் வீடியோவாக வந்தன.

மழை நீர் தேக்கம்

மழை நீர் தேக்கம்

மழை நீர் தேக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு நோயாளிக்கு முக்கிய அறுவை சிகிச்சை செய்ய காரில் வந்த மருத்துவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவர் 3 கி.மீ. தூரம் ஓட்டமாக ஓடி வந்து மருத்துவமனையை அடைந்தார்.

அச்சமடைய செய்யும் புகைப்படம்

அச்சமடைய செய்யும் புகைப்படம்

மழையால் மக்கள் ஒரு பக்கம் அவதிப்பட்டு வரும் நிலையில் மறுபக்கம் வதந்திகள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தால் ஆழ்ந்துள்ளனர். ஒரு சாலையில் தேங்கிய மழை நீரில் கார் முழுவதும் மூழ்கி ஏதோ ஆங்காங்கே லேசாக 2 சதவீதம் பகுதிகள் மட்டுமே தெரியும் அளவுக்கு இருக்கிறது.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய முற்பட்டபோதுதான் இது பெங்களூரே அல்ல என்றும் இது பழைய வீடியோ என்றும் தெரியவந்தது. அதாவது புளோரிடா மாகாணம் மியாமி நகரில் மழை வெள்ளத்தின் போது செவ்ரோலட் கார் வெள்ளத்தில் நீந்திய படி வந்ததைதான் சிலர் பெங்களூர் வெள்ளம் என கூறி வதந்தியை கிளப்பியுள்ளனர். மேலும் இந்த படம் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழைநீரில் முதலை அடித்து வரப்பட்டதாக வதந்தி கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

பெங்களூரில் காரே மூழ்கும் அளவுக்கு மழை பெய்ததாக புகைப்படம் வைரலானது

முடிவு

வைரலாகும் புகைப்படம் பெங்களூர் மழை வெள்ளம் அல்ல, அது ஜூன் மாதம் புளோரிடாவில மியாமியில் எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: very old video of car floats in rain water roams in Social media says that it happened in Bengaluru rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X