பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்
சென்னை: சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் கடும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு வாரங்களில் தங்களின் நான்காவது விலை உயர்வை நேற்று அமல்படுத்தியுள்ளன. இதன் காரணமாகக் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் நாட்டிலேயே எந்த நகரில் பெட்ரோல் விலை அதிகம்.. எங்குக் குறைவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
வளைகுடா போர் ஆரம்பித்த பிறகு கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல வாரங்கள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த மே 15ம் தேதி முதல் கணக்கிட்டால், வெறும் 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை ரூ.7 முதல் ரூ.8 வரை உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு விலை
முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்வோம். அதாவது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சூழலைப் பொறுத்து மாறுபடும். அப்படியிருக்கும் போது இந்தியாவில் எப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் வரும். மாநில அரசுகளின் மாறுபட்ட வாட் (VAT) மற்றும் உள்ளூர் வரிகள் காரணமாகவே இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் எரிபொருள் விலை வெவ்வேறாக இருக்கிறது..
எங்கு அதிகம்
கடந்த சில நாட்களில் மக்கள் மீதான பாரம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டில் எந்த நகரில் பெட்ரோல் விலை அதிகம்.. எங்குக் குறைவு என்பது குறித்து நாம் பார்க்கலாம். தற்போதைய சூழலில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தான் நாட்டிலேயே பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது. ஹைதராபாத்தில் இப்போது பெட்ரோல் விலை ₹115.73ஆகவும் டீசல் விலை ₹103.82 ஆகவும் இருக்கிறது. எரிபொருள் விலை உயர்வால் இங்கு வாழும் மக்களின் பர்ஸ்ஸை தான் அதிகம் பதம் பார்க்கிறது.
ஹைதராபாத்தைத் தொடர்ந்து கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அங்குப் பெட்ரோல், டீசல் விலை முறையே ₹115.49 மற்றும் ₹104.41 ஆக இருக்கிறது. ஹைதராபாத்தைக் காட்டிலும் திருவனந்தபுரத்தில் தான் நாட்டிலேயே டீசல் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நகரங்களைத் தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாகப் பெட்ரோல் விலை ₹113.54ஆகவும் டீசல் விலை ₹99.54ஆகவும் இருக்கிறது.
பிற நகரங்கள்
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ₹113.51ஆகவும் டீசல் விலை ₹99.82ஆகவும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ₹113.35ஆகவும் டீசல் விலை ₹98.39ஆகவும் இருக்கிறது. தொடர்ந்து மும்பை (பெட்ரோல்: ₹111.21, டீசல் ₹97.83), பெங்களூர் (பெட்ரோல் ₹110.61, டீசல் ₹98.54), புவனேஸ்வர் (பெட்ரோல் ₹108.83, டீசல் ₹100.55), மும்பை (பெட்ரோல் ₹111.21, டீசல் ₹97.83), பெங்களூர் (பெட்ரோல் ₹110.61, டீசல் ₹98.54), புவனேஸ்வர் (பெட்ரோல் ₹108.83, டீசல் ₹100.55) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது.
தமிழ்நாடு
அதன் பிறகு 9வது இடத்தில் நம்ம சிங்கார சென்னை இருக்கிறது. சென்னையில் ₹107.77ஆக பெட்ரோல் விலை இருக்கும் சூழலில், டீசல் விலை ₹99.55ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைநகர் பகுதியில் உள்ள குருகிராமில் பெட்ரோல் விலை ₹102.69ஆகவும் டீசல் விலை ₹95.36ஆகவும் இருக்கிறது. தொடர்ந்து டெல்லியில் பெட்ரோல் விலை ₹102.12ஆகவும் டீசல் விலை ₹95.20ஆகவும் இருக்கிறது. நொய்டா, லக்னோ, அகமதாபாத், சண்டிகர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலேயே தெலுங்கானா (பெட்ரோல் சராசரி: ₹114.27, டீசல்: ₹102.42) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (பெட்ரோல்: ₹114.23, டீசல்: ₹101.97) ஆகிய இரண்டு தெலுங்கு மாநிலங்கள் தான் எரிபொருள் விலையில் உலுக்கி எடுக்கின்றன. இதற்கு அடுத்தபடியாகக் கேரளா, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.












Click it and Unblock the Notifications