பொங்கல் பரிசு பற்றி சீமான் பேசியது உண்மையா? தமிழ்நாடு அரசின் FACT CHECK யுனிட் விளக்கம்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கிய நிகழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது வதந்தி என தமிழ்நாடு பேக்ட் செக் யூனிட் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கலுக்கு முன்பே ரூ.1,000 பரிசு தொகையுடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று கடந்த 5-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பை கூட்ட நெரிசலின்றி வழங்குவதற்காக கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வந்தார்கள். இந்நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை போல அரிசி அட்டைத்தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரூ.1,000 வழங்க முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் பணிகள் தொடங்கி உள்ளன.
உண்மை
— TN Fact Check (@tn_factcheck) January 10, 2024
ஜன. 9, 2024 ல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி 1000 பேருக்கு புத்தாடை, பொங்கல் தொகுப்பு வழங்கியது கட்சி சார்பில்தான். தமிழக அரசு சார்பில் அல்ல.
சற்றுமுன்பு (ஜன. 10) முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பொங்கல் தொகுப்பு வழங்கலைத் தொடங்கியுள்ளார். (1/2) pic.twitter.com/CFPhFWnJAm
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகை வழங்கும் வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
இதனிடையே பொங்கல் பரிசு தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, பொங்கலுக்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்குறீங்க.. தம்பி உதயநிதி வேட்டி சேலை சேப்பாக்கத்தில் கொடுத்தார். அதில் எதற்கு உங்கள் படம், உங்கள் அப்பா படம், தாத்தா படம், சின்னம் எல்லாம் இருக்கிறது.. இது யார் காசு.. இது யார் காசு... அது எப்படி உங்கள் கட்சி சின்னத்தை, உங்கள் படத்தை போட்டுக் கொள்வீர்கள்.. என் காசில் (மக்கள் காசில்) உனக்கு விளம்பரமா.." இவ்வாறு கூறியிருந்தார்.
இதனிடையே சீமான் கூறியது வதந்தி என்றும், திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சி என்றும் தமிழ்நாடு பேக்ட் செக் யூனிட் தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் ட்விட் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ட்விட் பதிவினை ஆதாரமாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், " நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு தைப்பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இன்று, திருவல்லிக்கேணி பகுதி, 120ஆவது வட்டக் கழகத்திற்கு உட்பட்ட சுதந்திரா நகரில் வசிக்கும் 1000 பேருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட தொகுப்புகளோடு, புத்தாடைகளையும் இன்று வழங்கினோம். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றோம்" என நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார்.

Fact Check
வெளியான செய்தி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்கு சேப்பாக்கத்தில் வேட்டி சேலை வழங்கிய நிகழ்ச்சிய போது, அவருடைய படம், அவருடைய அப்பா படம் போன்றவை இடம் பெற்றிருந்ததாக சீமான் கூறியிருந்தார். அது எப்படி உங்கள் படங்கள
முடிவு
ஜன.9ல் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி 1000 பேருக்கு புத்தாடை, பொங்கல் தொகுப்பு வழங்கியது கட்சி சார்பில் தான். தமிழக அரசு சார்பில் அல்ல என டிஎன் பேக்ட் செக் யூனிட் விளக்கம்
ரேட்டிங்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications