Fact Check: என்னாது பஸ் ஸ்டிரைக்கின் போது தற்காலிக டிரைவர்களால் விபத்தா? தீயாய் பரவும் பொய் செய்தி!
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது தற்காலிக டிரைவர்கள் ஓட்டியதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படும் தகவல்கள் பொய்யானது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்து வந்தனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் இவர்களுடைய போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் பொங்கல் பண்டிகையின் காரணமாக தற்போது போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு ஊழியர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை தொழிற்சங்கங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தின் போது அனுபவமே இல்லாத தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்து ஓட்டியதாக நிறைய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
அதில் ஒரு புகைப்படமானது, மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் டூ திண்டுக்கல் நோக்கி தற்காலிக ஓட்டுநர் ஓட்டி வந்த அரசு பேருந்து, கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல் என குறிப்பிட்டு தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.
இந்த நிலையில் இந்த தகவல் பொய்யானது என தெரியவந்துள்ளது. இந்த படம் மட்டுமல்லாமல் நிறைய படங்களை நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தகவல்கள் பொய் என TN Fact check தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TN Check எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அண்மையில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து என்ற செய்தி பொய்யானதாகும்.
உண்மை:
— TN Fact Check (@tn_factcheck) January 11, 2024
அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின்மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அண்மையில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்து என்ற செய்தி பொய்யானதாகும். (1/2) https://t.co/Ft1nU5OTEF

Fact Check
வெளியான செய்தி
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் போது தற்காலிக டிரைவர்கள் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக சமூகவலைதளங்களிலும் செய்திகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு
சமூகவலைதளங்களில் வைரலாகும் விபத்து படம் பொய்யானது. அந்த விபத்து நிகழ்ந்தது கடந்த 2023 ஜூன் 25 அன்று. பேருந்தின் எதிரே வந்த கார் டயர் வெடித்து, பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ரேட்டிங்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications