வெயில் காலம் வந்துடுச்சு.. கார், பைக்கில் இனிமேல் அதிகாலையில்தான் பெட்ரோல் போடணுமா? உண்மையா?
சென்னை: வெயில் காலம் வாட்டி வதைக்கும் நிலையில் கார், பைக்குகளில் அதிகாலையில்தான் பெட்ரோல் போட வேண்டும் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர். அது உண்மையா என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

நேற்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் 104.36°F, ஈரோடு 104.00°F, சேலம் 103.28°F, நாமக்கல் 103.10°F வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதோடு இல்லாமல் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும்.

பெட்ரோல், டீசல்: வெயில் காலம் வாட்டி வதைக்கும் நிலையில் கார், பைக்குகளில் அதிகாலையில்தான் பெட்ரோல் போட வேண்டும் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர். அதாவது வெயிலில் பெட்ரோல் வெப்பம் அடையும்.
பெட்ரோல் வெப்பம் அடைந்தால் அது விரிவடையும். இதனால் நீங்கள் குறைவான பெட்ரோல் போடும் போதே அதிக அளவில் பெட்ரோல் நிரப்பப்பட்டது போல கணக்கில் காட்டும்.
இதனால் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படும். பெட்ரோலும் சீக்கிரம் தீர்ந்துவிடும் என்று இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
இதனால் பிற்பகலில் பெட்ரோல் சூடான பின் போட கூடாது. பொதுவாக பெட்ரோலை இரவில்தான் பெட்ரோல் நிலையத்தில் நிரப்புவார்கள். அதனால் அதிகாலையில் பெட்ரோல் போடலாம்.
அப்போதுதான் நமது நஷ்டம் இருக்காது என்று சில நெட்டிசன்கள் இணையத்தில் போஸ்ட் செய்து வருகின்றன.
உண்மை என்ன?
ஆனால் இதில் முழு உண்மை கிடையாது.
பெட்ரோல் வெப்பம் அடைந்தால் அது விரிவடையும். இதனால் நீங்கள் குறைவான பெட்ரோல் போடும் போதே அதிக அளவில் பெட்ரோல் நிரப்பப்பட்டது போல கணக்கில் காட்டும் எனது நிஜம்தான்.
ஆனால் அதற்காக அதிகாலையில்தான் பெட்ரோல் போட வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் பெட்ரோல் நிலையங்களில் அடிப்பகுதியில் மிகப்பெரிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு அதில் பெரிய டேங்க் வைக்கப்பட்டு இருக்கும்.
கிட்டத்தட்ட 10 அடிக்கு மேல் இந்த டேங்க் இருக்கும். இதில்தான் பெட்ரோல் , டீசல் நிரப்பப்படும். இந்த தளம் மிகவும் கடினமாக, பெரிதாக இருப்பதால் வெளிப்புற வெயில் இங்கே பாதிப்பை ஏற்படுத்தாது.
அதாவது வெளிப்புற வெயில் உட்புறம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு உட்புறம் பெட்ரோலின் வெப்பநிலையையும் அதிகரிக்காது. இதனால் பெட்ரோல் விரிவடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதனால் இந்த பொய்யான தகவலை நம்பி பெட்ரோல் போட அதிகாலையில் எழுந்து சென்று உங்கள் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

Fact Check
வெளியான செய்தி
வெயில் காலம் வாட்டி வதைக்கும் நிலையில் கார், பைக்குகளில் அதிகாலையில்தான் பெட்ரோல் போட வேண்டும் என்று சில சமூக வலைத்தளங்களில் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர்
முடிவு
வெளிப்புற வெயில் பெட்ரோல் நிலையத்தில் உள்ளே இருக்கும் பெட்ரோலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் பெட்ரோலில் மாற்றம் ஏற்படாது.
ரேட்டிங்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications