Fact Check ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசமா? நம்பாதீங்க பொய் செய்தி!
சென்னை: ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண்பதற்காக 50 ஜிபி இணையதள சேவை இலவசமாக வழங்கப்படுவதாக பொய்யான செய்தி உலா வருகிறது.
ஃபிஃபா உலக கோப்பை 2022 கால்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இது டிசம்பர் 18ஆம் தேதி முடிகிறது. இந்த போட்டியில் 5 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் மாறியுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும் 8 மைதானங்களி் தயார்படுத்தப்பட்டுள்ளன.

23 ஆவது போட்டி
இந்த போட்டி 23 ஆவது கால்பந்து போட்டியாகும். முதல் போட்டி கத்தார்- ஈக்வடார் இடையே நடந்தது. இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்த மெசேஜுடன் ஒரு லிங்கும் உள்ளது. அதை கிளிக் செய்தால் 50 ஜிபி டேட்டா கிடைக்கும் என பரவி வருகிறது.

உண்மையா
இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பேக்ட் செக்கில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் இது போலியான செய்தி என தெரியவந்தது. இந்த மெசேஜை நம்பி நிறைய பேர் கிளிக் செய்திருந்தார்கள். அதில் ஒருவர் தான் பணத்தை ஏமாந்த விஷயத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் "லிங்கை கிளிக் செய்த போது கமென்ட் பாக்ஸில் 50 ஜிபி டேட்டா கிடைத்தது என கூறியிருந்தார்கள். அதில் ஒரு லிங்க் இருந்தது அதை கிளிக் செய்தேன்.

100 சதவீதம் லோடு
100 சதவீதம் லோடு ஆனது. அடுத்ததாக மொபைல் எண் கேட்டது, மொபைல் எண் கொடுத்த பிறகு... இதுக்கு மேலே சொல்ல விரும்பவில்லை. கடைசியில் என் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ 4300 பறிபோனது. என் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வங்கி செயலிகள் உள்ளிட்டை ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. நான் ஏமாந்தது மட்டும் இல்லாமல் என் நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்பச் சொன்னார்கள்.

50 ஜிபி
நன்றாக யோசித்து பாருங்கள். யாராவது 50 ஜிபி டேட்டாவை இலவசமாக கொடுப்பார்களா? தற்போது எனது போட்டோக்கள், வீடியோக்களை வைத்து என்னை மிரட்டி வருகிறார்கள். எனவே இந்த லிங்கை யாரும் கிளிக் செய்யாதீர்கள். யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள். போலி செய்தியை நம்பி பணத்தை இழக்காதீர்கள்.

Fact Check
வெளியான செய்தி
ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இலவச டேட்டா என தீயாய் பரவும் தகவல்
முடிவு
50 ஜிபி இலவச டேட்டாவை பெற லிங்கை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு, எனவே இது போலி செய்தி
ரேட்டிங்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications