தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும்.. வைரலாகும் வதந்தி.. தமிழக அரசு விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் விரைவில் சினிமா தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான வதந்திகளுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையிலும் கூட லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வந்து இருக்கிறது.தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசின் சின்னத்துடன் இந்த போலியான செய்தி குறிப்பு பரப்பப்பட்டு வருகிறது.
இதில் தமிழகத்தில் செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஆசிரியர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும். மக்கள் எல்லோரும் இடைவெளிவிட்டு அமர வேண்டும். முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று இந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விஷயங்கள் முழுக்க முழுக்க பொய்யானது .
இந்த இரண்டு விஷயங்களையும் தமிழக அரசு மறுத்துள்ளது. தமிழகத்தில் கண்டிப்பாக கல்வி நிறுவனங்கள் இப்போது திறக்கப்படாது. செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
அதேபோல் அக்.1-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவலும் தவறானது என்று அரசு தெரிவித்துவிட்டது. இது தொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
தமிழகத்தில் விரைவில் சினிமா தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
முடிவு
சினிமா தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்த செய்திகளை தமிழக அரசு மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications