For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fake News Buster: CLAT தேர்வு எப்போது நடக்கும்? பொய்யாக பரவும் செய்தி.. தேசிய சட்ட பல்கலை விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சட்ட படிப்பிற்கு நடக்கும் பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test -CLAT) தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பொய்யான செய்தி உலவி வருகிறது.

சட்ட படிப்பிற்கு நடக்கும் பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test -CLAT) குறித்த புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க தற்போது வைரலாகி வருகிறது. அதில் 2020ம் ஆண்டு நடக்க வேண்டிய பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test CLAT) ஒத்தி வைக்கப்படுகிறது.

Fake News Buster: NLU gives clarification on postponed days of CLAT exams

இந்த தேர்வு செப்டம்பர் 7ம் தேதி நடக்க வேண்டும். ஆனால் இந்த தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. தேசிய சட்ட பல்கலைக்கழக (என்எல்ஏ -NLA) கமிட்டி இந்த முடிவை எடுத்து இருப்பதாக இந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த செய்தி பாதி பொய்யாகும். அதன்படி பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test CLAT) தேதி ஒத்திவைக்கப்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்வை ஒத்திவைக்கவில்லை. மறு தேதி அறிவித்து இருக்கிறோம் என்று என்எல்ஏ தெரிவித்துள்ளது.

ஊர்க்காவல் படைக்கு சங்கம்...தண்டனைக்குரியது...தமிழக அரசு வாதம்!!ஊர்க்காவல் படைக்கு சங்கம்...தண்டனைக்குரியது...தமிழக அரசு வாதம்!!

பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test CLAT) வரும் செப்டம்பர் 28ம் தேதி நடக்கும் என்று என்எல்ஏ தெரிவித்துள்ளது. புதிய தேதியில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். இணையத்தில் பரவும் பொய்யான புகைப்படத்தை நம்ப வேண்டாம் என்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் 22 என்எல்ஏ கல்வி நிறுவனங்களில் சட்ட படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய தேர்வு இதோடு நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 28ம் தேதி மதியம் 2-4 வரை தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

பொது சட்ட நுழைவு தேர்வு (Common Law Admission Test -CLAT) தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக செய்தி பரவுகிறது.

முடிவு

பொது சட்ட நுழைவு தேர்வுக்கு மறு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 28ம் தேதி நடக்கும் என்று என்எல்ஏ தெரிவித்துள்ளது.

ரேட்டிங்

Half True
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake News Buster: NLU gives clarification on postponed days of CLAT exams for Law studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X