என்னது தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கா? ஷேர் செய்யப்படும் பொய் தகவல்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் என்ற கேப்சனுடன் சமூக வலைதளங்களில் பொய்யான ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரண விவகாரம் திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் சிங் மரணத்துக்கு நீதி கோருகிறோம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய குழுக்களில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. அதில், தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், மகேஷ் ஷெட்டி ஆகியோர் இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த படம் 2013-ம் ஆண்டு இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்டது. பன்சாலி இயக்கிய ராம் லீலா திரைப்பட ஷூட்டிங்கின்போது இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரன்வீர் சிங், தீபிகா நடித்திருந்தனர். 2013-ல் இன்ஸ்டாகிராமில் சந்தீப்சிங் இந்த படத்தை ஷேர் செய்தும் இருக்கிறார்.
இதில் தாவூத் இப்ராஹிம் என குறிப்பிடப்படுபவர், வாசிக் கான். சினிமா ஆர்ட் டைரக்டர். ராம் லீலா உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றியவர். இதனால் தாவூத்துடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்.
அண்மையில் 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில்தான் தாவூத் இப்ராஹிம் பதுங்கி இருப்பதாக அந்த நாடு கூறியிருந்தது. இதனைவைத்து சிலர் இப்படியான பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சின் இருப்பதாக ஷேர் செய்யப்படுகிறது படம்.
முடிவு
இந்த படத்தில் தாவூத் இப்ராஹிம் என சுட்டிக்காட்டப்படுகிற நபர் ஆர்ட் டைரக்டர் வாசிக் கான்.
ரேட்டிங்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications