கூகுள் பே-வில் பண மோசடி.. வாட்ஸ்அப்-ல் பரவும் ஆடியோ.. உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப்-ல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு ஆடியோ பதிவு, பலரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 'GPay-யில் இருக்கும் கை குலுக்கும் சின்னத்தை (ஹாட்டின் சின்னம்) தொட்டால் உங்கள் அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் உடனடியாக பறிபோகும்' என்று அந்த ஆடியோ எச்சரிக்கிறது.
இந்த ஆடியோ மக்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால், பலரும் தங்கள் GPay அக்கவுண்ட்டை சரிபார்த்து, பயந்து தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்னெச்சரிக்கை செய்தியாக இந்த ஆடியோவை அனுப்பி வருகின்றனர். 'இது உண்மையா? நம்ம பணம் பத்திரமாக இருக்கிறதா?' என பலரும் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆடியோவில் சொல்லப்படுவது உண்மையா? அல்லது தவறான தகவலா?

ஆடியோ-வில் இருந்த தகவல்:
இந்த ஆடியோவில் வரும் தகவல், 'சமீபத்தில் GPay-யில் ஒரு புதிய மோசடி முறை தொடங்கியுள்ளது. நீங்கள் யாருக்காவது கடைசியாக பணம் அனுப்பியிருந்தால், அந்த பேமெண்ட் ஹிஸ்டரிக்கு அருகில் இரு கைகள் குலுக்கும் சின்னம் ஹார்டின் விடிவில் இருக்கும்.
அந்த சின்னத்தை எக்காரணம் கொண்டும் தொடாதீர்கள்! நீங்கள் அதைத் தொட்ட உடனே, உங்கள் GPay அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் ஒரு சில நொடிகளில் பறிபோகும். இது நீங்க கூகுள் பே செயலியில், கடைசியாக யாருக்கு பேமெண்ட் அனுப்பியிருக்கிறோம் என்பதை பார்க்க வைப்பது போல் நடக்கும் ஒரு தந்திரமான மோசடி.
இந்த மோசடி இப்போது பெரிய அளவில் நடந்து வருகிறது. பலருக்கு ஏற்கனவே பணம் பறிபோயிருக்கிறது. தயவு செய்து இந்த ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.' என்று இந்த ஆடியோ முடிகிறது.
உண்மை என்ன?:
உண்மையில் கூகுள் பே-வில் அப்படி ஏதும் மோசடிகள் நடக்கவில்லை, BHIM செயலியில் இருப்பது போன்ற யூபிஐ சர்கிள் சேவை தற்போது கூகுள் செயலில் பாக்கெட் மணி என்ற பெயரில் வந்துள்ளது.
இது வங்கி கணக்கு இல்லாத உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருக்கமானவர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய உதவ கொண்டு வரப்பட்ட சேவை. இது வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ளது.
இத்தகைய சேவையை தான் தற்போது கூகுள் பே செயலியில் இரு கைகள் குலுக்கும் ஹார்டின் விடிவில் இருக்கும் சிம்பள். இதை தவறாக புரிந்துக்கொண்டு பலர் இதை மோசடி என கருதுகின்றனர்.
யூபிஐ சர்கிள் அல்லது பாக்கெட் மணி சேவை:
கூகுள் பே செயலியில் UPI Circle என்ற வசதி பாக்கெட் மணி என்ற பெயரில் வந்துள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாத ஒருவர் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த சேவை மூலம், நீங்கள் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஊழியர்களுக்கு பாக்கெட் மணி போல பணம் வழங்கி, அவர்கள் உங்கள் கணக்கின் மூலம் நேரடியாக UPI மூலம் செலுத்த முடியும்.
இந்த முறையில், Google Payயை பயன்படுத்தும் ஒருவர் 'முதன்மை பயனர்' ஆக இருப்பார். அவர் தனது வங்கி கணக்கை இணைத்து, மற்றவர்களை தனது 'UPI Circle'வில் சேர்க்கலாம். சேர்க்கப்படும் நபர்கள் 'இரண்டாம் நிலை பயனர்' ஆக இருப்பார்கள்.
இப்போது இரண்டாம் நிலை பயனர் UPI மூலம் பணத்தை செலுத்தும் போது முதன்மை பயனர் தனது வங்கி கணக்கின் மூலம் பணத்தை செலுத்தப்படும். இதனால், வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள், வயதானவர்கள் அல்லது டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கும் எளிதாக பண பரிவர்த்தனை செய்யும் வசதி கிடைக்கிறது. உதாரணமாக அப்பா-வின் கணக்கில் இருந்து மகன் யூபிஐ பேமெண்ட் செய்வது போல்.
மொத்தத்தில், 'UPI Circle' என்பது குடும்பத்தினருக்குள் அல்லது நெருக்கமானவர்களுக்குள் பணத்தை பாதுகாப்பாக பகிர்ந்து பயன்படுத்த உதவும் ஒரு புதிய டிஜிட்டல் வசதியாகும். இந்த பேமெண்ட் முறையின் கீழ் ஒருவர் மாதத்திற்கு 15000 ரூபாய் வரையில் டிஜிட்டல் பேமெண்ட் செய்துக்கொள்ள முடியும்.

Fact Check
வெளியான செய்தி
கூகுள் பே செயலியில் இரு கைகள் கோர்த்துப்படி இருக்கும் ஹார்டின் சிம்பள், பணத்தை திருடும் ஒரு மோசடி என வாட்ஸ்ஆப் ஆடியோவில் கூறப்பட்டு உள்ளது.
முடிவு
இது மோசடி இல்லை. அரசின் BHIM செயலியில் இருக்கும் யூபிஐ சர்கிள் என்ற சேவை கூகுள் பே செயலியில் பாக்கெட் மணி என்ற பெயரில் வந்துள்ளது. இதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.
ரேட்டிங்
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications