நடிகை பாவனி, அமீரின் கலப்பு திருமணம் செல்லாதா? பயில்வான் ரங்கநாதன் சொல்வது உண்மையா?
சென்னை: நடிகை பாவனி, அமீரின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார். இதை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தது பொய்யான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளது.
தமிழில் 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'ஜூலை காற்றில்', அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்று பிரபலம் ஆனார். அப்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் பாவனிக்கு பழக்கம் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவனியை அமீர் காதலித்தார்.

பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை பாவனி ஏற்கவில்லை..எனினும் நட்பு தொடர்ந்தது. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்தார்கள். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்தார்.
அதன்படி அமீர் - பாவனி ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றார்கள். அமீர் - பாவனிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன், பல்வேறு சினிமா நடிகர் நடிகைகளின் பழைய வாழ்க்கை குறித்தும், சினிமா நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட தகவல்களையும் அவ்வப்போது வீடியோவில் பேசி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாவனி அமீர் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், பாவனியும், அமீரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.. அமீர் இஸ்லாமியர்... பாவனி கிறிஸ்தவர்..
இதில் இருவரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், நான் கிறிஸ்தவராக வாழ்வேன் என பாவனி கூறியிருக்கிறார்.நான் இஸ்லாமியராக வாழ்வேன் என அமீர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் திருமணம் செல்லுபடியாகுமா என்றால்... ஆகாது.. சர்ச்சிலும் பதிவு செய்ய மாட்டார்கள். மசூதியிலும் பதிவு செய்ய மாட்டார்கள்.. தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையிலும் பதிவு செய்ய மாட்டார்கள்.. இது சிக்கலான திருமணம்..இது செல்லாது" இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருந்தார்.
"இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம்"
— TN Fact Check (@tn_factcheck) April 22, 2025
- பொய் சொன்ன பயில்வான் ரங்கநாதன்@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/lQKl3s0qUB
இந்நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு அமைப்பு, இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது எனறு யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் கூறுவது பொய் என்று விளக்கம் அளித்துள்ளது.
உண்மை சரிபார்ப்பு அமைப்பு அளித்துள்ள விளக்கத்தில் இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்து கொள்வதற்கு "சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது. அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்... இதுபோல் நடைபெறும் திருமணங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வதந்தியை பரப்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பரவும் செய்தி : நடிகர் பயில்வான் ரங்கநாதன், இரு வேறு மாதங்களைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்
முடிவு
முடிவு : தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின்படி, இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்து கொள்வதற்கு "சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது
ரேட்டிங்
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications