Fact Check: என்னாது செங்கல்பட்டில் வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளமா?.. அதெல்லாம் நம்பாதீங்க!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை. இது எடுக்கப்பட்டது செங்கல்பட்டும் இல்லை.. இவ்வளவு ஏன் இது தமிழ்நாடே இல்லை!
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஏதோ மேக வெடிப்பு ஏற்பட்டார் போல் மழை கொட்டுகிறது.
இதனால் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாது தவித்து வருகிறார்கள்.

திம்மாவரம்
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அது பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. அந்த வீடியோவில் வீடுகளை மூழ்கடித்து வெள்ள நீர் கொட்டுகிறது. வீட்டின் மாடியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டது.

அதிர்ச்சி
ஏதோ ஆற்றுக்குள் வீடு இருப்பது போல் காட்சியளித்ததால் அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது அது பழைய வீடியோ என தெரியவந்தது. மேலும் அது திம்மாவரம் பகுதி அல்ல என்றும் ஆந்திரா மாநிலம் என்றும் தெரியவந்தது. ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள ராஜம்பேட்டையில் எடுக்கப்பட்டது இந்த வீடியோ.

சமூகவலைதளவாசிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கனமழை பெய்தது. எனவே இது செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் இல்லை. பொதுவாக சமூகவலைதளங்களில் பழைய வீடியோக்கள், வேரெங்கோ நடந்த வீடியோக்களை போட்டு மக்களை பீதிக்குள்ளாக்குவது தொடர்கதையாகியுள்ளது. இதை சமூகவலைதளவாசிகள் தவிர்க்க வேண்டும்.

நல்ல விஷயங்கள்
தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும. இது போல் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Fact Check
வெளியான செய்தி
செங்கல்பட்டு மாவட்டத்தில் திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் துளியும் உண்மை இல்லை. இது எடுக்கப்பட்டது செங்கல்பட்டும் இல்லை.. இவ்வள
முடிவு
தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும. இது போல் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ரேட்டிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications