நாகர்கோவில் லாக் அப் மரணம்.. மாற்றம்னு சொல்லிதான வந்தீங்க விஜய்.. கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார். விசாரணை கைதி திடீரென உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கைகள், கால்கள், நெஞ்சு, வலது கையில் முறிவு என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறை வார்டன் உட்பட சிறை காவலர்கள் 3 பேர் அகுது செய்யப்பட்டுள்ளனர். சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவக்குமார், திருவிடைநம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Lockup death Premalatha vijayakanth TVK Vijay

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் லாக் அப் மரணம் நடந்திருப்பதால், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்த், கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள அத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை 3 அன்று தென்தாமரைக் குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 13 அன்று காலை சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். கைதலபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் 100 லாக்கப் படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டுமே போதுமான தீர்வாகாது. இனி தமிழகத்தில் எங்கும் லாக் அப்படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டத்தை மீறியவர்களுக்கு நண்டனை வழங்குவதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனவே, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொக்கிறோம். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+