விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த்... சிவகார்த்திகேயனுக்கு இந்த மோகன்தாஸா? ரசிகர்கள் கேட்கும் கேள்வி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் அவர் பேசிய விஷயங்கள் ஒருபக்கம் கவனம் பெற, இன்னொரு பக்கம் அந்த நிகழ்ச்சியில் அவரது அருகில் தொடர்ந்து இருந்த ஒருவரைப் பற்றியும் இப்போது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நபர் மோகன்தாஸ். எனக்கு மோகன்தாஸ் அண்ணன் ஒரு வரம் என்று சிவகார்த்திகேயனே பெருமையாக சொல்லியிருப்பதுதான் இந்தப் பேச்சுக்கு காரணம்.

சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்கத்தை ஆரம்பித்தது, அதை வெறும் ரசிகர் மன்றமாக இல்லாமல் நற்பணி அமைப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்தது, அதற்காக சரியான நபரை தேடியது என பல விஷயங்களை அந்த சந்திப்பில் பகிர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக 9 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய பார்த்து இப்போதுதான் சிவகார்த்திகேயனும் எந்த மன்றத்தை தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே 9 வருஷம் என்பதை அழுத்தமாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் பேச்சு

மோகன்தாஸ் குறித்து சிவகார்த்திகேயன் பேசியது இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. நற்பணி இயக்கத்தை யாரை வைத்து நடத்துவது என்று யோசித்தேன். நம்மை இயக்கும் நபர்கள், நற்பணி இயக்கத்தை நடத்தும் நபர் முக்கியமாக இருக்க வேண்டும். அப்படி என் வாழ்க்கையில் கிடைத்திருக்கும் வரம் தான் மோகன்தாஸ் அண்ணன். 9 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமாக இது நடந்து வருகிறது. இதுவரை ஒரு நாள் கூட எனக்கு, என் மகனுக்கு என அவர் கேட்டது இல்லை. நம்ம தம்பிகளுக்காக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர். அவர் பெயரில் என் அப்பாவின் பெயர் இருப்பதால் மோகன்தாஸ் அண்ணன் மீது கூடுதல் பாசம் இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் மோகன்தாஸ்

இப்போது இந்தப் பேச்சுதான் ரசிகர்கள் மத்தியில் வேறு ஒரு விதமான விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு மோகன்தாஸ் எல்லாமே போல இருக்கிறாரே... அப்படியானால் இவர் சிவாவின் புஸ்ஸி ஆனந்தா? என்று சில ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பீடு சிவகார்த்திகேயன் செய்தது கிடையாது. ரசிகர்கள்தான் விஜய்யின் அரசியல் பயணத்தில் புஸ்ஸி ஆனந்த் வகிக்கும் பங்கையும், சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்கத்தில் மோகன்தாஸுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் வைத்து இப்படிப் பேசுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரது ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைப்பதில் புஸ்ஸி ஆனந்த் முக்கியமாக இருந்தார். பின்னர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியபோது அந்த அமைப்பின் முக்கிய முகமாகவும் அவர் மாறினார்.

ரசிகர்களின் ஒப்பீடு

அதேபோல சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கத்தை ஒருங்கிணைத்து நடத்துவதில் மோகன்தாஸ் முக்கியமானவர் என்று சிவகார்த்திகேயனே தனது பேச்சில் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் இந்த ஒப்பீடு இப்போது வந்திருக்கிறது. ஆனால், இரண்டு பேரையும் அப்படியே ஒன்றாக வைத்து விட முடியுமா என்றால் அதற்கும் அவசரமாக பதில் சொல்ல வேண்டியதில்லை.

சிவகார்த்திகேயனின் நற்பணி மன்றம்

விஜய்யின் விஷயம் இப்போது நேரடியாக அரசியல் களத்தில் இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருப்பது நற்பணி இயக்கம். ரசிகர்களை ஒருங்கிணைத்து சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதுதான் இப்போதைக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. அதுவும் இந்த அமைப்பு நேற்றோ, நேற்று முன்தினமோ உருவானது இல்லை என்று சிவகார்த்திகேயனே சொல்லியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற சந்திப்பு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, இப்போது மட்டும் ஏன் இவ்வளவு பெரிய விவாதம்?

அதற்கு காரணம் இந்த சந்திப்பு நடந்த விதம். தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேடை, கூட்டம், நிர்வாகிகள் என்று பார்க்கும்போது அது ஒரு சாதாரண ரசிகர்கள் சந்திப்பு போல இல்லாமல் பெரிய அமைப்பு ஒன்று கூடுவது போல இருந்ததாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அதற்கு மேலாக சிவகார்த்திகேயன் தனது பேச்சில் நமக்கு பலம் இருக்கிறது மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும், தினந்தோறும் நற்பணி செய்வோம் என்று தொடர்ந்து பேசுகிறார். இப்போது அதே நிகழ்ச்சியில் மோகன்தாஸ் குறித்து, "என் வாழ்க்கையில் கிடைத்திருக்கும் வரம்" என்று சொல்கிறார். இதுதான் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+