இரண்டாக பிளந்த மண்டையோடு.. இந்திய பைலட்டின் மூளை பாதிக்க வாய்ப்பு - அவசர ஆபரேஷனின் ஷாக் பின்னணி
துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் நடுவானில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதற்காக அவருக்கு சவுதி அரேபியாவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த 30ம் தேதி 'ஃப்ளைதுபாய்' என்ற விமானம் புறப்பட்டுசென்றது. 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 விமான பணியாளர்கள் இருந்தனர்.
இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்கினர். நடுவானில் விமானம் பயணித்தபோது தொழுகை நடத்துவதாக கூறிய ஹமிம் அல் ஹமாமி, ஸ்மித் மச்சாரை தலையில் தாக்கினார். காக்பிட்டில் உள்ள அவசரகால கோடரியை எடுத்து இரக்கமே இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
இதில் நிலைக்குலைந்த ஸ்மித் மச்சார் போராடி காக்பிட் கதவை திறந்தார். இதையடுத்து பயணிகள் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியை சிறை பிடித்தனர். கூடுதலாக இருந்த 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டார். விசாரணையில் விமானத்தை கடத்தி விபத்து ஏற்படுத்தி அனைவரையும் கொல்ல முயன்றது தெரியவந்தது.காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது.
ஸ்மித் மச்சார் மட்டும் காக்பிட் கதவை திறக்காவிட்டால் பெரிய விபத்து ஏற்பட்டு 180 பேரும் பலியாகி இருப்பார்கள். தாக்குதலில் காயமடைந்த ஸ்மித் மச்சார் தற்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். முன்னதாக அவருக்கு சவுதிஅரேபியாவில் சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு தலையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
துனை விமானி ஹமிம் அல் ஹமாமியால் தாக்கப்பட்ட பைலட் ஸ்மித் மச்சார் தலையில் படுகாயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது மண்டை ஓட்டி விரிசல் ஏற்பட்டு இருந்தது. மண்டை ஓடு உடைந்து எலும்பின் ஒரு பகுதி மூளையை நோக்கி உள்நோக்கி தள்ளப்பட்டு இருந்தது. இது டிப்ரஸ்டு ஃபிராக்சர் (depressed fracture) எனப்படும்.
இதனால் மூளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மண்டையை சுற்றியுள்ள சாதாரண எலும்பு மட்டத்தைவிட கீழே இருப்பதால் இது மூளையை அழுத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடும். இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால் ஸ்மித் மச்சாருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் அவர் நலமானார். இதையடுத்து தான் அவர் சவுதி அரேபியாவில் இருந்து துபாய் அழைத்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
