மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம்.. உடனே ரூ.1000 கிடைக்குமாம்! பரவும் தகவல்.. உண்மை என்ன? Fact check
சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய 3 நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகையாக ரூ. 1000 வழங்கப்பட்டது. மேலும், விடுபட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யவும், புதிதாக பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
பரவி வரும் தகவல்: இந்நிலையில், கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக ஒரு தகவல் பரவி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 17,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், ரூ. 1000 உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை கொடுத்தால் உடனே உரிமைத்தொகை கிடைக்கும் என ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?: ஆனால், இது பொய்யான தகவல் என்றும், இது போன்று எந்த சிறப்பு முகாமும் இந்த தேதிகளில் நடைபெறவில்லை என்றும் மறுத்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக கூறி புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது.
முடிவு
இது பொய்யான தகவல் என்றும், மேற்கண்ட தேதிகளில் சிறப்பு முகாம் எதும் நடைபெறவில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
ரேட்டிங்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications