FACT CHECK: நபிகள் நாயகத்தை அவமதிப்பது முஸ்லிம்களின் உணர்வை மீறுவது என்ற ரஷிய அதிபர் -பின்னணி என்ன?
சென்னை: முஹம்மது நபியை நபியை அவமதிப்பது மத சுதந்திரத்தையும் இஸ்லாமியர்களின் புனிதமான உணர்வுகளையும் மீறுவதாகும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி கருத்து தற்போது பரவி வரும் நிலையில், அதன் உண்மை தன்மையை அலசுகிறது இந்த செய்தி.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகியவை இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்?
இந்த வரிசையில், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் நபிகள் நாயகம் குறித்த அவதூறு கருத்துக்காக கண்டனம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. டி.ஆர்.டி. வேர்ல்டு என்ற ஆங்கில இணைய ஊடகம் ட்விட்டரில் பகிர்ந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டையும் பலர் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆங்கில ஊடகம்
இதுகுறித்த செய்திகள் வேறு எந்த ஊடகத்திலும், ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸிலும் கூட வெளியாகாததால் இதன் உண்மைதன்மை குறித்து சந்தேகம் எழுந்தது. உடனே டிஆர்டி வேர்ல்டு செய்தி தளத்திலேயே விளாடிமிர் புதின் குறித்த செய்திகளை தேடினோம். அப்போதுதான், "Putin: Insulting Prophet Muhammad is not freedom of expression" என்ற தலைப்பிலான சமூக ஊடகத்தில் வெளியான செய்தி கிடைத்தது.

பழைய செய்தி
அதில் செய்தி பதிவிடப்பட்ட தேதி 2021 டிசம்பர் 24. ரஷியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "நபியை அவமதிப்பது மத சுதந்திரத்தையும் இஸ்லாமியர்களின் புனிதமான உணர்வுகளையும் மீறுவதாகும்." என தெரிவித்து இருந்தார். 6 மாதத்திற்கு முந்தைய இந்த செய்தியைதான் தற்போதைய நிகழ்வுடன் தொடர்புபடுத்தி பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
முஹம்மது நபியை நபியை அவமதிப்பது மத சுதந்திரத்தையும் இஸ்லாமியர்களின் புனிதமான உணர்வுகளையும் மீறுவதாகும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு பதிலடி கொ
முடிவு
2021 டிசம்பர் மாதம் விளாடிமிர் புதின் தெரிவித்த கருத்தை புதியதை போல் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications