Fact check: பாக். சைபர் தாக்குதலால் 70% மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதா? பரவும் வதந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியா பற்றி போலியான செய்திகளை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. குறிப்பாக தங்களின் சைபர் தாக்குதலால் இந்தியாவில் 70% அளவுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று போலியான தகவலை பரப்பி வருகிறது.

மத்திய அரசின் உண்மை ஆராயும் குழு, இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்திருக்கிறது. அதிகாரப்பூர்வமான தகவலை மட்டுமே நம்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது.

pakistan india Pakistan

இந்தியாவை பொருத்தவரை மையப்படுத்தப்பட்ட மின்சார அமைப்பு என்று ஒன்று கிடையாது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வடகிழக்கு என 5 முக்கியமான மின் விநியோக அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த பகுதிகளுக்கான மின் விநியோகத்தை கவனிக்கிறது. நிலக்கரி மூலம் அதிக அளவில் இந்தியாவுக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, சூரிய சக்தி, அணு மற்றும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 5 மண்டலங்களையும் RLDCs எனும் அமைப்பு கண்காணிக்கிறது. மின் விநியோகத்தில் ஏற்படும் சிக்கல், தடை உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

இப்படி இருக்கையில் சைபர் தாக்குதல் மூலம் மின் விநியோகத்தை துண்டிக்க செய்வது முழுமையாக சாத்தியமற்றதாகும். இதற்கு முன்னர் கடந்த 2020ல் மும்பையில் சிறு அளவு சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது கொஞ்ச நேரத்திற்கு மும்பையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டது. மால்வேர் வைரஸ் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி சிறு சிறு மின்வெட்டை வேண்டுமானால் ஹாக்கிங் மூலம் ஏற்படுத்த முடியுமே தவிர, நாடு முழுவதும் முழுமையான மின்வெட்டை ஏற்படுத்த முடியாது. அந்த வகையில் சைபர் தாக்குதலால் 70% மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று பரப்பப்படும் தகவல்கள் போலியானவை. மக்களிடம் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்த இந்த மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகின்றன என மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது.

கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு எதிராக இந்தியா நடத்திய மிகப்பெரிய வேட்டைதான் ஆபரேஷன் சிந்தூர். பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை, தங்களுக்கு எதிரான தாக்குதல் என்று கூறி பாகிஸ்தான் தற்போது சண்டையில் இறங்கியிருக்கிறது. இந்த சண்டையின் ஒரு பகுதியாக போலி தகவல்களை அது பரப்பி வருகிறது.

Fact Check

வெளியான செய்தி

பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவில் 70% மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

முடிவு

இந்தியாவின் மின் விநியோகத்தை சைபர் தாக்குதலால் முழுமையாக நிறுத்த முடியது. சோஷியல் மீடியாவில் வலம் வரும் 70% மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனும் தகவல் போலியானது என மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழ

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+