Fact Check: இஸ்லாமியர்களுக்கு பட்டாசு வழங்கினாரா உதயநிதி? வேகமாக பரவும் வதந்தி!
சென்னை: தீபாவளிக்காக இஸ்லாமியர்களுக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டாசுகளை வழங்கியதாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. நலத்திட்ட உதவிகளை வழங்கியதை, தீபாவளி பட்டாசு என சிலர் தவறாக சித்தரித்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பட்டாசு விற்பனைகள் சூடுபிடித்துள்ளன. முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு இந்த முறை விற்பனை சிறப்பாக இருக்கும் என விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மறுபுறம், துணி, நகை ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. சென்னையில் ரங்கநாதன் தெரு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இப்படி இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு பட்டாசுகளை வழங்கியதாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை x தளத்தில் சின்னப்ப கணேசன் (மோடியின் குடும்பம்) என்கிற பயனர் ஷேர் செய்து, "முஸ்லிம்களுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்..? சனாதனத்தை ஒழிக்க முஸ்லிம்களுக்கு தீபாவளி பட்டாசு - பரிசு வழங்கிய இளவரசர்..!" என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து TN Fact Check உண்மையை சரி பார்த்திருக்கிறது. அதில், "23.10.24 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மக்களுக்கு கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அந்த காணொளியைப் தீபாவளிக்கு இஸ்லாமியர்களுக்கு பட்டாசுகளை வழங்கியதாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்" என தெரிவித்திருக்கிறது. சேப்பாகம் தொகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில், நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் சிலர் அவதூறாக பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பட்டாசுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
முடிவு
23.10.24 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மக்களுக்கு கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இந்த காணொளிதான் இஸ்லாமியர்களுக்கு பட்டா












Click it and Unblock the Notifications