மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. மத்திய அரசு வழங்குகிறதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? இதோ விளக்கம்
சென்னை: ஏழை மற்றும் கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 என்ற பெயரில் இலவசமாக லேப்டாப் வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்பது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு ட்வீட் பதிவிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
ஏழை மாணவர்களுக்கு "பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024" என்ற பெயரில் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்க உள்ளதாகாவும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்றால் பதிவு செய்ய வேண்டும் என்ற மெசேஜ் உடன் இணையதள லிங்கும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இலவச லேப்டாப்: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனிநபர்கள் சொந்தமாக லேப்டாப் வாங்க இயலவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை மேம்பட இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது எனவும் இதற்கான காலக்கெடு ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த தகவலை உண்மை என நம்பிய பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து வந்தனர்.
கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப்பில் காட்டுத்தீ போல இந்த தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு (TN Fact Check) இது தொடர்பான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024-ன் கீழ் மாணவர்களின் லேப்டாப் பெற ஏப்ரல் 28. 2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் ஓர் தகவல் பரவி வருகிறது
உண்மை என்ன?: இது முற்றிலும் வதந்தியே.. இப்பதிவுடன் வரும் இணைப்பு (லிங்க்) அரசின் அதிகாரப்பூர்வ இணைப்பு முகவரி இல்லை. தற்போது அது பயன்பாட்டிலும் இல்லை. மத்திய அரசின் கல்வித்துறையில் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுமம்(AICTE) இத்தகவலை மறுத்துள்ளது.
தங்களுக்கும் இந்த திட்டத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் இதுபோன்ற தகவலை கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் நம்ப வேண்டாம் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது” என்றூ தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் குறித்து இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் மாநில தலைமை அதிகாரி வினோத் குரியகோஸ் கூறியதாவது:-
வங்கி பேலன்ஸ் ஜீரோ ஆகிடும்: 'பொது சேவை மையம் போன்ற பெயரில் உலா வரும் போலியான குழு அல்லது நபர்களின் மூலம் பெறப்படும் எந்த ஒரு சேவைக்கும் பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம். எந்த ஒரு ஆப் மற்றும் லிங்கையும் கிளிக் செய்யக் கூடாது. யாருக்கும் பகிரவும் கூடாது. அதேபோல, அந்த லிங்கில் சென்று தகவல்கள் எதையும் பதிவு செய்யவும் கூடாது” என்றார்.
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக பெருகிவிட்ட இந்த காலத்தில் பல்வேறு மோசடிகளும் தகவல் தொழில் நுட்பம் மூலமே அரங்கேறுகின்றன. எனவே, இதுபோன்ற பரப்பப்படும் வதந்திகளை நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் வங்கி கணக்கில் பேலன்ஸ் ஜீரோ ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது என்று ஐடி துறை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 இன் கீழ் மாணவர்கள் லேப்டாப் பெற ஏப்ரல் 28, 2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் ஓர் தகவல் பரவி வருகிறது.
முடிவு
இது முற்றிலும் வதந்தியே..இப்பதிவுடன் வரும் இணைப்பு(Link), அரசின் அதிகாரப்பூர்வ இணைய முகவரி அல்ல. தற்போது அது பயன்பாட்டிலும் இல்லை.ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய தொழில்ந
ரேட்டிங்
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications