Fact Check: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் ஓட்டு போடலாமா? எப்படி? உண்மை என்ன?
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் என பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

பரவி வரும் தகவல்: இது ஒருபுறம் இருக்க தேர்தல் தொடர்பான போலிச் செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்திய தேர்தல்களின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம் என பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், 49A பிரிவின் கீழ் வாக்குச் சாவடியில் உள்ள அலுவலரிடம் ஆதார் அட்டையைக் காட்டி வாக்களிக்க எனக்கு உரிமை உள்ளது எனக் கோரி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன?: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத குடிமக்கள், வாக்குச் சாவடியில் ஆதார் அட்டையைக் காட்டி, பிரிவு 49A-ன் கீழ் வாக்களிக்கலாம் என்ற கூற்று தவறானது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, வாக்களிக்க ஒரு குடிமகனின் பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் உங்களது வாக்காளர் அட்டை காணாமல் போயிருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 14 புகைப்பட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். ஆனால், இது அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சூழலில் மட்டுமே.
உங்க பெயர் இருக்கா? இல்லையா?: வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியே அறிந்து கொள்ளலாம். அனைத்து வாக்காளர்களுக்கும், தேர்தல் ஆணையம் சார்பில், 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடந்து வருகிறது.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள், தங்கள் பெயர், வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதா, தங்கள் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விபரங்களை, www.elections.tn.gov.in, voters.eci.gov.in ஆகிய இணையதளங்களிலும், 'voter Helpline' என்ற மொபைல் போன் செயலியிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும், வாக்குச்சாவடி அலுவலரிடம் கோரி தேர்தலில் வாக்களிக்கலாம் என தகவல் பரவி வருகிறது.
முடிவு
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை. இந்திய தேர்தல்களில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் வாக்களிக்க எந்த ஏற்ப
ரேட்டிங்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications