வெறும் 60 நிமிடத்தில் 10 லட்சம் வரை கடன்.. மாத சம்பளக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஃபின்னபிள்..!
சென்னை: சம்பளம் வரும் தேதி நாம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் செலவு வரும் தேதி யாருக்கும் தெரியாது. அப்படி வாழ்க்கையில் சில செலவுகள் திட்டமிட்டு வருவதில்லை, ஆனால் அத்தகைய செலவுகள் வந்ததும், அதைத் தள்ளிப் போடவும் முடியாது. உதாரணமாக அவசர மருத்துவச் செலவுகள், குழந்தையின் கல்விக் கட்டணம், ஏன் குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் என எதாவது ஒரு காரணத்திற்காக.. நமக்குக் கூடுதல் பணம் தேவைப்படலாம்.
இத்தகைய இக்காட்டான வேளையில் நம்மிடம் இருக்கும் சொற்பமான சேமிப்பு கட்டாயம் போதாது, குறிப்பாக மாத சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பத்தில் நிதி சேமிப்பு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த சூழ்நிலையில் அக்குடும்பத்திற்கு பெரும் பணத் தேவை வந்தால்.. இந்த நெருக்கடியான நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நிதி பிரச்சனையில் இருந்து பாதுகாப்பது 'தனிநபர் கடன் ' தான்.

எதிர்பாராத சூழ்நிலையில் பணத் தேவைக்காக உடனடியாக கடன் பெறுவது என்பது மிகவும் சவாலான விஷயம், பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்றாலும் சரி, தங்க நகை வைத்து கடன் வாங்க வேண்டும் என்றாலும் சரி சில மணிநேரமாவது ஆகும்.
உதாரணமாக அவசர மருத்துவச் செலவுகள் இருக்கும் வேளையில் அரை நாள் வங்கிகளில் காத்திருந்து கடன் வாங்குவது என்பது சரியாக இருக்காது. இத்தகைய சூழ்நிலையில் நம்மை ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றுவது இன்ஸ்டன்ட் லோன் தளங்கள் தான்.
இன்று டிஜிட்டல் வங்கி சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில் இன்ஸ்டன்ட் லோன் செயலிகள் முக்கியமானதாக மாறுகிறது. அப்படி இந்தியா முழுவதும் சேவை அளித்து வரும் Finnable என்ற இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு NBFC நிறுவனம் வெறும் ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் வரையில் பர்சனல் லோன் அளித்து வருகிறது.
இந்தியாவின் இளம் தலைமுறையினருக்காகவே பிரத்யேகமாக நிதி சேவை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த Finnable நிறுவனம். மருத்துவச் செலவு, வீட்டை மறுசீரமைப்பு செய்வது, இன்டீரியர் டிசைன் மாற்றுவது, சுற்றுலா செல்வது வரையில் அனைத்து தேவைகளுக்கும் பர்சனல் லோன் அளிக்கிறது ஃபின்னபிள்.
ஃபின்னபிள் தளத்தில், ஒருவர் பர்சனல் லோனை ஒரிரு நிமிடத்தில் அப்ளை செய்துவிட முடியும், மேலும் எவ்விதமான பேப்பர் அடிப்படையிலான ஆவணங்கள் இல்லாமல், பணயம் இல்லாமல் வெறும் 60 நிமிடத்தில் கடன் அளிக்கிறது இந்த NBFC நிறுவனம்.
முக்கிய அம்சம்
ஃபின்னபிள் தளத்தில் வாங்கும் பர்சனல் லோனுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஒரேமாதிரி இஎம்ஐ தொகை கணக்கிடப்படாது. பொதுவாகக் கடனுக்கான வட்டி முழு கடன் தொகைக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியாகக் கணக்கிடப்படும். ஆனால் ஃபின்னபிள் தளத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, மீதமுள்ள அசல் கடன் தொகை (Outstanding Principal) மீது வட்டி கணக்கிடப்படும்.
இது Flat Rate முறையைக் காட்டிலும் குறைவான நிதி தாக்கத்தை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும். ஒவ்வொரு மாதமும் நிலுவையில் உள்ள கடன் தொகை குறைவதால், அதற்கேற்ப வட்டியும் குறையும் வசதி இதில் உள்ளது.

முக்கிய தகுதிகள்
பொதுவாக இன்ஸ்டன்ட் லோன் தளங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கடன் கொடுக்கப்படும், ஆனால் ஃபின்னபிள் தளத்தில் சில முக்கிய தகுதிகள் அடிப்படையில் தான் கடன்களை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குகிறது.
வயது வரம்பு: ஃபின்னபிள் தளத்தில் கடன் பெற வேண்டுமாயின் உங்களுடைய வயது 21 முதல் 55 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
வேலை: நீங்கள் மாதம் சம்பளம் வாங்கும் முழு நேர ஊழியராக இருக்க வேண்டும்.
மாத சம்பள தகுதி: இத்தளத்தில் நீங்கள் கடன் பெற வேண்டுமாயின் குறைந்தபட்சம் 15000 ரூபாய் சம்பளம் பெற வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்: அனைத்திலும் முக்கியமாக இத்தளத்தில் கடன் பெற வேண்டுமென்றால் உங்களுடைய சிபில் கிரெடிட் ஸ்கோர் 650-க்கு மேல் இருக்க வேண்டும்.
எவ்வளவு கடன் கிடைக்கும்..?
ஃபின்னபிள் தளத்தில் உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதை 2 நிமிடத்தில் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக நீங்கள் 3 படிகளை மட்டும் பாலோ செய்தால் போதும்.
முதலில் ஃபின்னபிள் இணைய தளத்தில் மொபைல் நம்பர் கொடுத்து லாக்கின் செய்யவும். அடுத்த படி உங்களுடைய அடிப்படை தரவுகள் கொடுக்க வேண்டும் அதாவது பான் எண், வயது, வருமான அளவு, நீங்கள் வசிக்கும் நகரம் போன்றவற்றைக் கொடுத்தால் போதும். அடுத்த சில நொடிகளில் உங்களுக்கு எவ்வளவு கடன் பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
இத்தளத்தில் ரூ.3000 முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற முடியும்.
கடனுக்கான வட்டி விகிதம்
ஃபின்னபிள் தளத்தில் அளிக்கப்படும் கடனுக்கு ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் 16 சதவீதம் முதல் 30.99 சதவீதம் வரையிலான வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் 6 - 60 மாதம் வரையில் கொடுக்கப்படுகிறது. இந்த காலத்தை நீங்கள் பர்சனல் லோன் பெறுவதற்கு அப்ளை செய்யும் போது தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
முக்கியமாக இத்தளத்தில் கடன் அளிப்பதற்காக 5% + ஜிஎஸ்டியை பிராசசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முக்கிய ஆவணங்கள்
ஃபின்னபிள் தளத்தில் பர்சனல் லோன் பெற்ற விண்ணப்பம் செய்யும் செயல்முறையைத் துவங்கும் முன் 4 முக்கிய ஆவணங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
1. பான் கார்டு
2. ஆதார் கார்டு
3. கடைசி 3 மாத Pay Slips
4. கடைசி 3 மாத வங்கி கணக்கின் அறிக்கை.
மேலும் ஃபின்னபிள் தளத்தில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் செக் செய்வதற்கான வசதிகளும் உள்ளதால். ஒருவருடைய தகுதிகளை வேகமாக ஆய்வு செய்யப்பட்டு 60 நிமிடத்தில் பர்சனல் லோன் கொடுக்கப்படும்.
ஏன் ஃபின்னபிள் பெஸ்ட்
இறுதியாகச் சந்தையில் பல இன்ஸ்டன்ட் லோன் தளங்கள் இருந்தாலும், ஏன் ஃபின்னபிள் பெஸ்ட் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். முதல் விஷயம் இத்தளத்தில் மாத சம்பளம் வாங்குவோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் தளம் என்பதால் இப்பிரிவினர் எளிதாகக் கடன் வாங்க முடியும்.
அடுத்தாக முழு கடன் பிராசஸ்-ம் டிஜிட்டல் முறையில் நடக்கிறது. எனவே பேப்பர் ஆவணங்கள் கொடுக்க தேவையில்லை, இதேபோலே தகுதிகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகச் செய்யப்படுவதால் 10 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்குள் வேகமாகக் கடன் பெற முடியும்.












Click it and Unblock the Notifications
