வைரம், ரத்தினம் நகையும் படக்னு இறங்கிடுச்சே.. இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் போன அக்டோபரில் என்னாச்சு
சென்னை: அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த பொருளுக்கும் விதிக்கப்படும் வரி குறித்த விவாதங்கள் தினந்தோறும் இணையத்தில் நடந்து வருகிறது. இதில், வைரங்கள், தங்கம் மற்றும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 52.1 சதவிகித வரி விகிதமும் அடக்கம்.. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினக் கற்கள் வர்த்தகம் கணிசமாக குறைந்துள்ளதாக, தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக வர்த்தகம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகம் சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 2016ல், நம்முடைய நாட்டிலிருந்து 3,750 டன் சரக்கு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அது தற்போது மெல்ல குறைந்துவிட்டது. அதிபர் டிரம்ப் விதித்த வரியால் அமெரிக்காவில் தேவை குறைந்துள்ள நிலையில், ஆர்டர்களும் குறைந்துவிட்டதாக கூறகிறார்கள்...
எனினும் இந்தியாவுக்கான வரியை குறைக்க போவதாக டிரம்ப் கூறியிருப்பதால், வர்த்தகம் மெல்ல சீராகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
நகை, ரத்தினம்
இந்நிலையில், நகையை போலவே, ரத்தினத்தின் வர்த்தகமும் குறைந்துள்ளதாக தொழில்துறை தரவுகள் கூறுகின்றன.. முத்து, பவளம், வைடூரியம் உள்ளிட்ட ரத்தினங்கள் மற்றும் ரத்தின ஆபரணங்களும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.. இதில், கடந்த மாதம் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினக் கற்கள் வர்த்தகம் கணிசமாகவே குறைந்துவிட்டதாம்.
வட்டி விகிதங்கள் - கடன்
சர்வதேச அளவில் தேவை குறைவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, வினியோக தொடர் சிக்கல்கள், அமெரிக்க வரி விதிப்பு போன்றவைகளையே இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் என்று நகை மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறுகிறது.
அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 30.57 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஏற்றுமதி 2168.05 மில்லியன் டாலராக அதாவது சுமார் ரூ.19,172.890 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரத்தினங்கள் ஏற்றுமதி
நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அக்டோபரில் ஏற்றுமதியில் ஏற்பட்ட இச்சரிவுக்கு அமெரிக்காவின் வரிகள் விதிப்பதற்கு முன்பு தேவை அதிகரித்ததுதான் காரணம்.
ஆகஸ்ட் 27க்கு முன்பு பண்டிகை காலத்திற்கான கையிருப்பு அதிகமாக சேர்க்கப்பட்டதால் அக்டோபர் மாதத்தில் தேவை குறைவாக இருந்தது... மேலும், தங்கம், வெள்ளி ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவுக்கு தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களும் இதற்கு காரணம்.
வைரங்கள்
அந்தவகையில், ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட மெருகூட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதியும் கடந்த மாதம் 34.90 சதவீதம் குறைந்து 94.37 மில்லியன் டாலராக (ரூ. 834.45 கோடி) பதிவாகியுள்ளது. முக்கியமாக, ஆய்வக வைரத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், இயற்கை வைரங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தினங்கள் ஏற்றுமதி
அதேபோல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலும், ரத்தினங்களின் ஏற்றுமதி 3.21 சதவீதம் குறைந்து 250.14 மில்லியன் டாலராக (ரூ. 2173.08 கோடி) பதிவாகியுள்ளது. வெள்ளி நகைகளின் ஏற்றுமதியும் அக்டோபர் மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 121.37 மில்லியன் டாலராக (ரூ. 1072.81 கோடி) இருந்துள்ளது.
எனினும், சீன சந்தை மெதுவாக மீண்டு வருவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதாலும், முக்கிய சந்தைகளிலும் தேவை அதிகரிக்கலாம். எனவே இந்த நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications