ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? விஜய்க்கு போகும் விஷயம்.. அமைச்சர் குட்நியூஸ்
தேனி: விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி அளித்துள்ளார். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டியின் போது கூறினார்.
தேனி பழனிசெட்டிபட்டி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று ஆய்வு மேற்கொண்டார் . ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தரமான அரிசிகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் வெங்கட்ரமணன், "ரேஷன் கடைகளில் தரம் இல்லாத அரிசி கிடைப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டோம். தேனியில் 15 தற்காலிக கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது, தேவைக்கேற்ப நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு திறந்தவெளி குடோனில் வைக்கப்படும் அரிசி, தானியங்களை பாதுகாப்பதற்கு தரம் உயர்த்தப்பட்ட அறிவியல் பூர்வமான குடோன் காட்டப்பட்டு வருகிறது, அதில் அரிசி தானியங்களை பாதுகாப்பாக சேமிக்கப்படும் என் தெரிவித்தார்
விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநில எல்லைகளில் பல்வேறு துறை இணைந்து ஒருங்கிணைந்த துறையாக செயல்பட்டு எந்தவித கடத்தலும், கையூட்டும் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு சமையல் எரிவாயு வெகு விரைவில் கிடைப்பதை துரிதப்படுத்தி உள்ளோம் என்றார். திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது, 50 ஆண்டுகால கட்சிகளை தவிர்த்து விட்டு த.வெ.காவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
அமைச்சர் வெங்கட்ரமணன் தேனியில் அளித்த பேட்டியில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து பேசியிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். அடிக்கடி விலை வீழ்ச்சி அடைக்கிறது. எனவே ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தந்தால், தங்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் தருவது எளிதானது அல்ல. ஏனெனில் பாமாயிலை அரசு 25 ரூபாய் என்கிற மானிய விலையில் தான்மக்களுக்கு அரசு தருகிறது.
வெளியில் தேங்காய் எண்ணெய் விலை மிகமிக அதிகம். மிகவும் காஸ்ட்லியான எண்ணெய் பட்டியலில் தேங்காய் எண்ணெய் உள்ளது. அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெய் பல வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்துவது குறித்த விழிபபுணர்வு இல்லை. அரசும் நிதிச்சுமை கருதி யோசித்து வருகிறது. ஏனெனில் அரசு 100 ரூபாய்க்குமேல் மானியம் தர வேண்டியதிருக்கும். இந்த சூழலில் தான் விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கூறியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.














Click it and Unblock the Notifications