ஓடி ஒளிய மாட்டான் திமுககாரன்! மக்கள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்காங்க! விளாசிய திமுக மாஜி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திமுகவினர் எந்த காரணத்தை கொண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது. சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழக அமைச்சர்களின் மோசமான செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கு பதில் கிடைக்கும் என திமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட அவரது படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

Anitha Radhakrishnan TVK DMK

இதற்கு முன்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், நகர நிர்வாகிகள் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்," எழுதி கொடுத்து மேடைக்கு மேடை பேசும் தேவை எங்களுக்கு கிடையாது. முதலமைச்சர் எழுதி கொடுத்ததை பார்த்து மேடையில் பேசி வருகிறார். பேசுவது மறந்தவுடன் அருகில் உள்ள பேப்பரை எடுத்து பார்த்து படிக்கிறார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களின் செயலையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முடிவு விரைவில் வரும். திமுகவை சார்ந்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டு ஓடி ஒளிபவர்கள் கிடையாது. கரூர் சம்பவத்தில் 42 பேர் இறந்த நிலையில் திருச்சியில் இருந்து முதல்வர் ஓடியதை அனைவரும் பார்த்தார்கள். அப்படி ஓடுபவர்கள் திமுகவினராக இருக்க மாட்டார்கள். திமுகவினர் யாரை கண்டும் ஓடுபவர்கள் கிடையாது. சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக தான் இருப்பார்கள் என தெரிவித்தார்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+