முதல் காதல் இதனால் தான் பிரேக்கப் ஆனது..! நூறுசாமி பட நடிகை சுவாசிகா ஓபன் பேச்சு.. ரசிகர்கள் கேள்வி இதுதான்!
சென்னை: கல்யாணம் ஆகிவிட்டால் தன்னுடைய பழைய காதலை பற்றி பலர் பேசுவதற்கே தயங்குவார்கள். ஆனால் நடிகை சுவாசிகா தன்னுடைய முதல் காதல் பற்றி வெளிப்படையாக பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்புதான் சுவாசிகா சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன்பு ஒருவரை தான் காதலித்தது எதனால் பிரேக்கப் ஆனது என்பது பற்றி அவர் பேசியது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சுவாசிகா கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் தமிழில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் லப்பர் பந்து படம் தான். அந்த படத்தில் அவருடைய கேரக்டர் மக்களிடம் இயல்பாக கனெக்ட் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு இந்த நடிகை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த பலரும் சுவாசிகாவின் பழைய படங்களை தேட ஆரம்பித்தார்கள் அந்த அளவிற்கு அந்த ஒரு படம் அவருக்கு சினிமா பயணத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது.
நடிகை சுவாசிகாவின் ஆரம்ப காலம்
சுவாசிகாவின் வெற்றி ஒரே நாளில் கிடைத்ததில்லை. ஆரம்பத்தில் மலையாள சினிமா, சீரியல்கள், சின்ன கேரக்டர்கள் என்று கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து நடித்து வந்தார். அதே போல தமிழிலும் கோரிப்பாளையம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் லப்பர் பந்து, மாமன், நூறு சாமி போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

சுவாசிகாவின் திருமண வாழ்க்கை
சினிமாவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த ஆண்டு சுவாசிகாவிற்கு முக்கியமான வருஷமாகவே அமைந்தது. சின்னத்திரை நடிகராக பிரேம் ஜேக்கப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரேம் இப்போதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சுவாசிகா தன்னுடைய முதல் காதலை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது எனக்கு முதலில் ஒரு காதல் இருந்தது. அந்த நபரை நான் எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை. அது ஒன்றும் தவறான தேர்வு கிடையாது. அவர் ரொம்ப அழகானவர். என்னை நல்லபடியாக மதித்தார். எங்களுக்குள் இருந்த உறவும் தவறானது இல்லை.
பிரேக்கப் காரணம்
ஆனால் அவருடைய குடும்பத்தில் திடீரென்று பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவருடைய மனதளவில் ரொம்ப கடுமையாக பாதித்தது. பிறகு காதல் வாழ்க்கையா? குடும்ப வாழ்க்கையா? என்ற குழப்பத்தில் தான் எங்களுக்கு பிரேக் அப் ஆனது. அதை மறைத்து ரகசியம் காக்க வேண்டும் என்று அவசியம் எனக்கு இல்லை என்று அவர் ஓபனாக பேசியிருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து
பொதுவாக ஒருவருக்கு கல்யாணம் முடிந்துவிட்டால் அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி பலரும் பேச மாட்டார்கள். ஆனால் இவர் இப்படி பேசி இருப்பது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு சிலர் கடந்த காலத்தில் காதல் இருந்ததை மறைக்காமல் அவரைப் பற்றி எந்த இடத்திலும் அசிங்கப்படுத்தாமல் பேசியிருக்கிறாரே என்று கமெண்ட் கொடுத்திருக்கின்றர்.
இன்னும் ஒரு சிலர் கல்யாணம் முடிந்து வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது பழைய வாழ்க்கையைப் பற்றி எதற்காக பேச வேண்டும்? இது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications