IRCTC-ல் ஜூலை 15 முதல் செம மாற்றம்.. தட்கல் டிக்கெட் எடுப்பது இனி இவ்வளவு ஈசியா?
சென்னை: இந்திய ரயில்வேயில் சூப்பர் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. ஆம், பயணிகளின் நீண்ட கால கோரிக்கை ஒன்று அமலாகபோகிறது.. பயணிகளின் நிம்மதியான பயணம் அமைய வேண்டும் என்பதற்காகவே, இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தை முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. இதனால் கிடைக்கக் கூடிய வசதிகள், நன்மைகள், என்னென்ன தெரியுமா? இதை பற்றின தகவல்களைதான் இங்கே நாம் பார்க்க போகிறோம்.
இந்திய ரயில்வேயை பொறுத்தவரை தவிர்க்க முடியாத பொதுப்போக்குவரத்தாகும்.. தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள்.. இந்தியாவில் சுமார் 88 சதவீத ரயில் டிக்கெட்டுகள் டிஜிட்டல் முறையிலேயே புக்கிங் செய்யப்படுகின்றன.

தட்கல் டிக்கெட் - முடக்கம்
இருந்தாலும் அவசரத்துக்கு தட்கல் டிக்கெட் எடுக்கும்போது, வெப்சைட் திடீரென முடங்கி போய்விடுகிறது.. கேப்ட்சாகுறியீடுகளை உள்ளிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.. இதெல்லாமே பயணிகளுக்கு அவதியை தந்து வந்தன.
அதனால்தான், பயணிகளின் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரயில்வே ஐஆர்சிடிசி இணையதளத்தை டோட்டலாக புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த புதிய இணையதளத்தின் "பீட்டா பதிப்பு" வரும் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஐஆர்சிடிசி புதிய மாற்றம்
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன (MNIT) மாணவர்கள், ஐஆர்சிடிசி வெப்சைட்டில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தாங்கள் எதிர்கொள்ளும் டெக்னிக்கல் சிக்கல்களை அமைச்சரிடம் விரிவாக சொன்னார்கள்.
மாணவர்களின் புகார்களை கேட்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஜூலை 15ம் தேதிக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்தும் களையப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இணையதளம் வெளியிடப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். .
ரயில்வே அமைச்சகம் சூப்பர் நியூஸ்
அமைச்சர் சொன்னதுபோலவே, ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையமும் (CRIS) ஐஆர்சிடிசியும் இணைந்து, ஜெய்ப்பூர் எம்.என்.ஐ.டி மாணவர்களைச் சந்தித்து இந்த புதிய பீட்டா பதிப்பு குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளன. புதிதாக அறிமுகமாக உள்ள இந்த ஐஆர்சிடிசி தளம், டிக்கெட் முன்பதிவில் உள்ள அனைத்து கோளாறுகளும் நீக்கப்பட உள்ளன..
முன்பதிவு செய்யும் நேரத்தையும் பாதியாக குறைக்க போகிறதாம்.. பழைய கேப்ட்சா சரிபார்ப்பு முறை இதில் முற்றிலும் நீக்கப்படுகிறதாம்.. அதுமட்டுமல்லாமல் வெப்சைட்டின் வேகத்தை குறைக்கும் தேவையற்ற கிராஃபிக்ஸ், பாப்-அப் ஸ்கிரீன்களும் இல்லாதவாறு டிசைன் செய்ய போகிறார்களாம். அதாவது பயணிகள் எளிமையான முறையில் சில படிவங்களை மட்டுமே நிரப்பி, மிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட முடியும்.
ரயில் பயணிகள் மகிழ்ச்சி
பயணிகள் டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய முயலும்போதே, அவர்களுக்கு அந்த டிக்கெட் உறுதியாக கிடைக்குமா என்பதை ஏஐ முன்கூட்டியே சொல்லிவிடும்.. ரயிலின் அனைத்து வகுப்புகளுக்கான சீட் விவரங்களும் ஒரே ஸ்கிரீனில் தெளிவாகக் காட்டப்படும்.
தட்கல் நேரங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்தினாலும், தளம் சற்றும் முடங்கிப் போகாமல் தடையின்றி சீராக செயல்படும் வகையில் சர்வர் திறன் பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்குள் சுமார் 1.5 லட்சம் டிக்கெட்டுகளை இனிமேல் முன்பதிவு செய்ய முடியுமாம்.. இந்த தகவல்கள் எல்லாம் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகின்றன...!!












Click it and Unblock the Notifications