இப்போ மட்டும் தங்கம் வாங்கவே வாங்காதீங்க.. பெரிய சிக்கல்.. கடுமையாக எச்சரித்த பொருளாதார நிபுணர்
சென்னை: தங்க நுகர்வில் இந்தியர்கள் உலக அளவில் முன்னணியில் இருந்தாலும், தங்கத்தை வாங்குவது உண்மையான முதலீடு ஆகாது என்று பொருளாதார நிபுணர் அபிஷேக் வாலியா எச்சரித்து உள்ளார். இந்தியர்கள் பாரம்பரிய முறைகளை தவிர்த்து, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்வது சரியாக இருக்காது என்று கூறி உள்ளார்.
நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்க இ.டி.எஃப் (Gold ETFs) மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை மூலம் முதலீடுகள் செய்வதே சரியானது என்று அவர் எச்சரித்து உள்ளார்.

தங்கத்தின் மீதான மோகம்
தங்கம் காலப்போக்கில் தனது மதிப்பை தக்க வைத்துக் கொண்டாலும், அது மற்ற முதலீடுகள் போல வேகமான ரிட்டர்ன் தரக்கூடிய சொத்து அல்ல.. தங்கத்தை விட வேறு நல்ல முதலீடுகள், பாதுகாப்பான முதலீடுகள், நாட்டின் உற்பத்தி திறனை உயர்த்தும் முதலீடுகள் உள்ளன என்று அபிஷேக் வாலியா விளக்குகிறார். இந்தியர்கள் உலகளவில் தங்கத்தை அதிகளவில் நுகரும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர். இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு பெரும்பாலும் நகைகளாகவே உள்ளது. இந்தியாவிலுள்ள தங்கத்திற்கான ஆண்டு தேவையில் சுமார் பாதி நகைகளிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் நகை நுகர்வு 563.4 டன்னாக இருந்தது. இது சீனாவின் நுகர்வான 511.4 டன்னை விட அதிகமாகும். இதன் மூலம் தெற்காசிய நாடான இந்தியா தங்க நுகர்வில் உலகின் மிகப்பெரிய சந்தையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தங்க தேவை 761 டன்னாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் 5% அதிகரித்து 802.8 டன்னாக உயர்ந்துள்ளது.
தங்கம் முதலீடு சரியா?
முதலீட்டு ஆலோசகரான அபிஷேக் வாலியா கூறுகையில், இந்தியர்கள் தவறவிடும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. தங்கத்தை வாங்குவது என்பது தங்கத்தில் முதலீடு செய்வது போன்றது அல்ல. தங்கம் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக திருமணங்கள் மற்றும் பண்டிகைகளின்போது இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் நிதி ரீதியாக, உங்கள் செல்வத்தை பெருக்குவதற்கு இது எப்போதும் சிறந்த வழி அல்ல. தங்கம் வாங்கி சேமிப்பது பாதுகாப்பானது. ஆனால் அதனால் உங்களுக்கு சொத்து உயராது. இதை முதலீடாக பார்க்க முடியாது,
மக்கள் தங்கம் வாங்கும் போது, அந்த பணத்தில் 20-30% சேதாரம் மற்றும் இதர கட்டணங்களுக்காக செலவிடப்படுகிறது. நீங்கள் நகைகளை ஒரு முதலீடு என்று நினைத்து வாங்குவீர்கள். ஆனால் இந்த நஷ்டங்களை கணக்கு செய்யாமல் விட்டுவிடுகிறீர்கள். அதோடு தங்கத்தை மாற்றும்போது சந்தை விலையை விட குறைவாகவே கிடைக்கும். ஏனெனில், தங்கத்தின் தூய்மை மற்றும் இதர காரணங்களுக்காக வியாபாரிகள் பணம் குறைத்து தருவார்கள். தங்கம் நினைத்தவுடன் எளிதாக பணமாக மாற்றக்கூடிய சொத்து அல்ல. அதிலும் குறிப்பாக, முழு மதிப்பையும் பெற வேண்டுமென்றால் அது சாத்தியமில்லை.
இதனால் தங்க நுகர்வில் இந்தியர்கள் உலக அளவில் முன்னணியில் இருந்தாலும், தங்கத்தை வாங்குவது உண்மையான முதலீடு ஆகாது என்று பொருளாதார நிபுணர் அபிஷேக் வாலியா எச்சரித்து உள்ளார்
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications