அப்படி போடு.. 1 பவுன் தங்கமாவது வாங்கி போடுங்க.. இந்த வருட கடைசியில் தங்கம் விலை அடியோடு மாறுமாம்
சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த 3 வருடங்களில் ஜனவரி மாதம் தங்கம் விலை எப்படி இருந்தது.. அதுவே டிசம்பர் மாதம் ஒவ்வொரு வருடமும் எப்படி இருந்தது என்று பார்க்கலாம் .. அதை வைத்து 2025 வருட கடைசியில் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும் என்ற கணிப்பையும் பார்க்கலாம்.
வரலாற்று தங்க விலைகள் (ஒரு கிராமுக்கு 24K):
2022ல் தங்கத்தின் விலை எப்படி இருந்தது
ஜனவரி: ₹5,267 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
டிசம்பர்: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
ஆண்டு அதிகரிப்பு: ~10.7%
2023ல் தங்கத்தின் விலை எப்படி இருந்தது
ஜனவரி: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
டிசம்பர்: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
ஆண்டு அதிகரிப்பு: ~9.2%
2024ல் தங்கத்தின் விலை எப்படி இருந்தது
ஜனவரி: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
டிசம்பர்: ₹7,800 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது.
ஆண்டு அதிகரிப்பு: ~22.6%

ஏப்ரல் 1, 2025 நிலவரப்படி, பொதுவாக தங்கத்தின் விலை கிராமுக்கு ₹9,201 ஆக உள்ளது. இன்று சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,284 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,510 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,020 ஆகவும் உள்ளது.
இந்த வருட ஆண்டு அதிகரிப்பு 10-15 சதவிகிதம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10-15% என்ற வளர்ச்சி விகிதத்தை வைத்துக்கொண்டால், டிசம்பர் 2025க்குள் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10,100 முதல் ₹10,600 வரை இருக்கும். அதாவது இப்போது உள்ள ஒரு பவுன்.. 68 ஆயிரத்தில் இருந்து 84 ஆயிரமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வருட கடைசியில் கிட்டத்தட்ட ரூ. 90 ஆயிரத்தை ஒரு பவுன் தங்கம் தொடும்.
விடாமல் தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க விலையில் $3,100-ஐ தாண்டி உள்ளது. ஏப்ரலில் இந்த விலையை தங்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. மார்ச் கடைசி நாளிலேயே இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது. தற்போது இது 3104 டாலராக உள்ளது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும்.
இதன் மூலம் அடுத்த ஏப்ரல் மாதம் முழுக்க தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,65,574 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை.
அமெரிக்காவில் வட்டியை நிர்ணயிக்கும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் வட்டி நிதி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரையிலான இலக்கு வரம்பிற்குள் வைப்பதாக அறிவித்தது. அதாவது தற்போது உள்ள வட்டி விகிதத்தை குறைக்கவே , ஏற்றவோ இல்லை. ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் ரெபோ ரேட் போலத்தான். இந்த வட்டி புள்ளிகள் குறைக்கப்பட்டால்.. கண்டிப்பாக டாலர் மதிப்பு சரியும். வரும் நாட்களில் இனி தொடர்ந்து டாலர் மதிப்பு சரியும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) ஃபெடரல் அறிவித்து விட்டதால் இனி டாலர் விகிதம் சரிவை நோக்கியே செல்லும். இதனால் டாலர் மதிப்பு சரிவது உறுதியாகிவிட்டது. இதனால் தங்கத்தின் மதிப்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications