தங்கம் விலை அதிரடியாக குறைய போகுது.. அமெரிக்காவால்.. எல்லாரும் எதிர்பார்த்த நாட்கள் வரப்போகுது
சென்னை: உலக நாடுகளில் பொருளாதார மந்த நிலை, அமெரிக்கா எடுத்து வரும் பல்வேறு நாடுகளுக்கு எதிரான வரி போர், பொருளாதார தடைகள் காரணமாக தங்கமே பாதுகாப்பான முதலீடு என்று கருதி பலரும் முதலீடு செய்கிறார்கள். இதனால் தங்கம் விலை ஒரேடியாக ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த சூழல் நீண்ட நாள் நீடிக்காது என்றும், தங்கம் விலை கண்டிப்பாக குறையும் என்றும் பொருளதார நிபுணர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்புவதற்கு காரணம், இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவை விரைவில் தீரும். பழையபடி டாலர் மீது நம்பிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான் காரணம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்திய நாள் முதலே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது இதன் காரணமாக பலர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படி என்றால், சர்வதேச அளவில் வேறு பிரச்சனை போகிறது. இஸ்ரேல் காசா போர், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகளுக்கு இடையே அரசியல் பதற்றம் அதிகமாக உள்ளது.

அதேபோல் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கவில்லை.. இதன் காரணமாக பலர் அமெரிக்காவின் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு பதில், பாதுகாப்பிற்காக தங்கத்தில் முதலீடு செய்கின்றன. இது ஒருபுறம் எனில், தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பை அதிகரிக்கவும், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், பல நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கரூர், கிட்னி திருட்டு, ஆம்ஸ்ட்ராங்.. தமிழக அரசுக்கு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் 3 பின்னடைவுகள்
தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த வார மத்தியில் பவுன் ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் 8ம் தேதி காலை ரூ.100 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், ரூ.800 அதிகரித்து பவுன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் 2-வது முறையாக ஒரே நாளில் தங்கம் விலை அன்றே உயர்ந்தது. அதாவது மேலும் ரூ.85 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ரூ.680 அதிகரித்து பவுன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. ஆனால் அக்டோபர் 10ம் தேதி அன்று தங்கம் விலை சற்று குறைந்து 90720 விற்றது. ஒரு கிராம் தங்கம் 11,425 ரூபாய்க்கும் விற்றது. அக்டோபர் 11ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 92,000 ஆக விற்றது. ஒரு சவரன் 11500க்கு விற்றது. நேற்று ஞாயிறு என்பதால் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே 92000 ஆக தொடர்ந்தது. ஆனால் திங்கள்கிழமையான இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 92200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.11525க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை விரைவில் ஒரு லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் தங்கம் விலை இப்படி தாறுமாறாக ஏறினாலும், உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தால், அப்படியே சர்ரென தங்கம் விலை குறையும் என்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், அமெரிக்கா இந்தியாவுக்கு எதிரான 50 சதவீத வரி விதிப்பை விரைவில் திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.
அதேபோல் இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் வகையில் ஒப்பந்தம் ரெடியாகி உள்ளது. இதை ஹமாஸ், இஸ்ரேல் தரப்பு ஏற்றால், மீண்டும் சுமூகமான சூழல் ஏற்படும். அப்படி நடந்தால் சர்வதேச அளவில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் ரஷ்யா உக்ரை இடையே போர் முடிவுக்கு வந்தால், தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.. இந்த மூன்று விஷயங்களும் விரைவில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அனேகமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் தங்கம் விலை அதிரடியாக குறையும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications