இதெல்லாம் உண்மையான ரேட் இல்லை.. இனிமேல்தான் இருக்கு.. தங்கம் விலையில் கதி கலங்க வைத்த நிபுணர்கள்
சென்னை: தங்கம் விலை ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், உண்மையான உயர்வு இன்னும் வரவில்லை இனிமேல் தான் இருக்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பெரிய அளவில் விலை உயர்வானது காத்துக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்து இருக்கின்றனர்.
தங்கம் விலை வரலாறு காணாத நிலையில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் இன்று சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் புது ஆண்டு பிறந்ததில் இருந்தாவது தங்கம் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நடப்பு ஆண்டிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 காரட் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, புதிய உச்சம் தொட்டது.
ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ரூ.13,120க்கு விற்பனையானது. அதேபோல சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 1,04,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்தது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இனிமேலும் விலை உயரத்தான் செய்யும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தங்கம் விலை நிபுணர்கள் கூறியதாவது:- தங்கம் விலை உண்மையான உயர்வு இன்னும் வரவில்லை. இன்னும் பெரிய உயர்வை நோக்கித்தான் தங்கம் விலை இருக்கும். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது தங்கத்தின் விலை உயர்வை விட வெள்ளியின் விலை உயர்வு சதவிகிதத்தில் அதிகமாகவே போகும்.
வரும் காலங்களில் பெரிய அளவில் விலை உயர்வானது காத்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாடும் போரிட்டுக்கொண்டே சென்றால், இந்த போர் சூழல், நிச்சயமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு முடிவுக்கு வர்க்கூடிய சூழல் இல்லை. எனவே, முதலீட்டாளர்களின் எண்ணம், தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் உயர்ந்து கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது.
அதனால்தான் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இரண்டாவது அவர்களின் முதலீட்டு பொருளாக வெள்ளி உள்ளது. வெள்ளி முதலீட்டு பொருளாக இல்லாமல் பல தொழில்களுக்கு ஒரு மூலப்பொருளாக பயன்பட்டு வருவது விலை உயர்வுக்கு கூடுதல் காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications