Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு சொல்லி அடிக்கும் நேரம்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ்
Weekly Rasi Palan: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசியினருக்கு அம்மாவுடன் தகராறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடன் இணக்கமாகச் செல்வது நன்மையைத் தரும். ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அங்காளம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நிறைய நன்மைகளும், அனுகூலமும் காணப்படும். நிறைய தெய்வ காரியங்களில் ஈடுபடக்கூடிய யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான டென்ஷன்களை தள்ளி வைப்பது நல்லது. ஆடி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சைவத்திற்கு மாறி விடுவது நல்லது. அல்லது திங்கள்கிமையாவது அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும். 4 ஆம் இடத்தில் குரு இருப்பதால் பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.
பணவரவு
பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. வீட்டில் அமைதி, நிம்மதி, சந்தோஷம் நிலவும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இந்த வாரத்தின் ஆரம்பப் பகுதி, இறுதிப் பகுதியில் மட்டும் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும். வாரத்தின் முதல் நாள் கணவரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வழிபாடு
குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிருப்தி மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சுப்பிரமணியரை வழிபாடு செய்வது, அபிஷேகத்துக்கு கொடுப்பது நன்மையைத் தரும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும் பொருளாதார ரீதியாக 70 சதவீதமும் நன்மைகள் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications