வரலாற்றில் முதல்முறை.. வெள்ளி விலை எதிர்பார்க்காத உச்சம்.. அப்பவே சொன்னாங்களே.. வாங்கி இருக்கலாமே!
நியூயார்க்: வரலாற்றில் முதல்முறையாக வெள்ளி விலை MCXல் ஒரு கிலோ ரூ. 1,09,250 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வரி விகிதம் குறைக்கப்படாத காரணத்தால், வெள்ளி விலை கணிசமாக உயர்ந்தது.
சமீப மாதங்களில், தங்கத்தின் விலை உலக அளவிலும், இந்தியாவிலும் கூடி வருகிறது. வெள்ளி விலை ஒப்பீட்டளவில் தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக வருமானத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

MCXல் வெள்ளி விலை புதிய உச்சம்
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஜூலை மாதத்திற்கான வெள்ளி எதிர்கால ஒப்பந்தங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ. 1.09 லட்சத்தைத் தாண்டியது. ஆகஸ்ட் மாதத்திற்கான எதிர்கால ஒப்பந்தங்கள் இன்று MCXல் ஒரு கிலோ ரூ. 1,09,250 என்ற உச்சத்தை எட்டியது. மேலும், இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,050-லிருந்து சுமார் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு சந்தைகளிலும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. Investorgain தரவுகளின்படி, இந்தியாவில் வெள்ளியின் சராசரி விலை ஒரு கிலோ ரூ. 1,10,000 ஆக இருந்தது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹122 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,22,000 ஆகவும் உள்ளது.
வெள்ளி உயரும்
வரும் மாதங்களில் தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி அதிக லாபத்தை அளிக்கும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பொருளாதார வல்லுனர்கள் வெள்ளியில் கவனம் செலுத்துவதற்கான மற்றொரு முக்கிய காரணம், தங்கம்-வெள்ளி இடையிலான விகிதம் ஆகும். இந்த விகிதம் கடந்த சில மாதங்களில் 100-ஐ தாண்டியுள்ளது. அதாவது தங்கம் வெள்ளி வேறுபாட்டை வைத்து இந்த விகிதம் நிர்ணயிக்கப்படும். கோவிட் நெருக்கடிக்குப் பிறகு இரண்டாவது முறையாக விகிதம் 126 ஐ எட்டி உள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்கக்கூடிய அதே பணத்தில் எவ்வளவு அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும் என்ற அடிப்படையில் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தங்கம் வெள்ளியை விட மிக வேகமாக உயர்ந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரிக்கிறது.
ஆனால் வரலாற்று தரவுகளின்படி சென்றால் இந்த விகிதம் வரும் நாட்களில் குறையும். இதன் அர்த்தம் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து.. தங்கத்துடன் உள்ள வேறுபாட்டை குறைக்கும். அதாவது இப்போது உள்ள வேறுபாடு நீடிக்காது. இதன் அர்த்தம் தங்கத்தின் விலைக்கு கொஞ்சம் அருகில் வெள்ளி வரும். கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த விகிதம் 80 க்கு மேல் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் (2000 முதல்), இந்த சராசரி 68 ஆக உள்ளது, 10 ஆண்டு சராசரி 85 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்த விகிதம் அதிகமாக இருந்தது, ஏனெனில் தங்கம் 260% வருமானம் அளித்தது, வெள்ளி 60% வருமானம் கொடுத்தது.
இப்போது இந்த விகிதத்தை சரி செய்ய.. வெள்ளி விலை வேகமாக உயரும். இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு சாதகமாக அமையும்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications