துபாயில் தங்கம் வாங்கப் போகிறீர்களா? வரி இல்லாமல் இந்தியாவுக்கு எவ்வளவு கொண்டு வரலாம் தெரியுமா?
சென்னை: இந்தியாவை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வருவதற்கு சில விலக்குகளும் உள்ளது. அந்த வகையில் ஒரு ஆண் அல்லது பெண் எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
துபாய் உலகளவில் தங்கம் வாங்க சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. குறைந்த விலை, உயர்ந்த தரம் ஆகியவற்றால் இந்தியர்கள் பெரும்பாலானோர் தங்கம் வாங்குவதற்காக துபாய்க்கு செல்கின்றனர். ஆனால் அங்கு வாங்கிய தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும்போது சுங்கச் சட்டங்களும், வரி வரம்புகளும் இருப்பதை பலர் கவனிக்கவில்லை.
இந்திய அரசின் தற்போதைய விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் சில நிபந்தனைகளுடன் மட்டும் தங்க நகைகளை வரியின்றி கொண்டு வரலாம். ஆண்கள் தங்கள் உடன் 20 கிராம் வரை தங்க நகைகள் கொண்டு வரலாம். ஆனால், அதன் மொத்த மதிப்பு 50,000 ரூபாயை தாண்டக்கூடாது.

துபாய் தங்கம்
இதேபோல், பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகள் கொண்டு வரலாம். அவர்களின் அதன் விலை உச்ச வரம்பு மதிப்பு ₹1 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது. இந்த விதி தங்க நகைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது தங்க நாணயம் (coins), தங்க கட்டி (bars), தங்க பிஸ்கட் (biscuits) போன்றவற்றுக்கு இது பொருந்தாது. அவற்றை கொண்டு வர வேண்டுமெனில் சுங்க வரி கட்டவேண்டும். மேலும், இந்த வரி விலக்கு சலுகையை பெற வேண்டுமெனில் அந்த நபர் குறைந்தது ஒரு வருடம் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கிய நிபந்தனை.
வரி இல்லா தங்கம்
ஒரு வருடத்திற்குக் குறைவாக வெளிநாட்டில் இருந்தவர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவர். சிறுவர் பயணிகளுக்கு எந்தவிதமான தங்க வரியில்லா அனுமதியும் வழங்கப்படவில்லை. குழந்தைகளின் பெயரில் தங்கம் கொண்டு வந்தால் அதற்கும் சுங்க வரி கட்டவேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட அளவை விட அதிக தங்கம் எடுத்துவரும் பயணிகள் இந்திய விமான நிலையத்தில் வந்து சுங்க அதிகாரிகளிடம் அவசியமாக தெரிவிக்க வேண்டும்.
இந்திய சுங்க விதிகள்
தெரிவிக்காமல் கூடுதல் தங்கத்தை கொண்டு வந்தால் அது கடுமையான குற்றமாக கருதப்படும். அதற்காக சுமார் 15.75% வரை வரி ( செஸ் மற்றும் சார்ஜ் உட்பட) கட்ட வேண்டும். தவறினால் தங்கம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, தங்கம் வாங்கிச் செல்லும் முன் பரிவர்த்தனை ரசீது (bill/invoice) வைத்திருப்பது, நகைகளின் எடை முன்கூட்டியே அளந்து தெரிவிப்பது, தங்க நாணயம் அல்லது பிஸ்கட் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது.
தங்க இறக்குமதி
துபாய் இன்னும் தங்கம் வாங்க சிறந்த இடமாகவே உள்ளது. ஆனால் இந்தியாவின் இறக்குமதி விதிகளை சரியாகப் புரிந்து கொள்வது, விமான நிலையத்தில் சிக்கல் இல்லாமல் நாட்டுக்குத் திரும்ப உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். துபாய் தங்கம் இவ்வளவு மலிவாக இருக்க காரணம். இந்தியாவுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை துபாயில் குறைவுதான். இந்தியாவை விடவும் துபாயில் தங்கம் விலை குறைவாக இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலாவதாக. வரியில்லா வர்த்தகம். துபாயில் தங்கம் வாங்குவதற்கு வரிகள் விதிக்கப்படுவதில்லை. தங்கத்தை வாங்குபவர்கள். சந்தையில் கூடுதலாக எந்த வரியும் இன்றி வாங்கிக்கொள்ளலாம். இதேபோன்று இறக்குமதி வரி கிடையாது என்பதால் தான் துபாயில் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications