Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனு ரூ.3,040 அதிகரித்து பெரிய ஷாக் கொடுத்தது. மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை கடும் அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று குறைய வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. தொடர்ந்து மாலையில் மேலும் குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை கடந்த 30 ஆம் தேதி காலையில் குறைந்து இருந்த நிலையில் மாலை தாறுமாறாக உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,10,160 என்ற அளவில் இருந்து. ஆனால் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து இருந்தது.

gold price Chennai gold

தொடர்ந்து சரிந்த தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.1,26,200 -க்கு விற்பனை ஆனது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக சரியத் தொடங்கியது. நாளுக்கு நாள் விலை குறைந்துகொண்டே வந்தது. தொடர்ந்து ஏறி வந்த தங்கம் விலை திடீரென சரியத் தொடங்கியது நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்த தங்கம் விலை 23 ஆம் தேதி சரமாரியாக குறைந்தது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கம் வாங்க சரியான நேரமா? அல்லது இன்னும் குறையுமா என்ற குழப்பம் நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஒரு சிலர் குறைந்த வரைக்கும் போது நகைகளை வாங்குவோம் என சிலர் வாங்கிவிட்டனர்.

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

ஆனால் மேலும் தங்கம் விலை குறையும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு பிறகு தங்கம் விலை குறைந்தாலும் அதைவிட அதிகரித்ததே அதிகம் ஆகும். பெயரளவில் குறைந்துவிட்டு உயரும்போது பல மடங்காக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் தான் நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,160 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.380 அதிகரித்து 14,050-க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் தங்கம் விலை இன்று எப்படி இருக்குமோ என கலக்கமடைந்து இருந்தனர்.

இன்றைய ரேட் என்ன?

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இன்று சென்னையில் ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. உயரும் போது 3 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துவிட்டு குறையும் போது 800 என்ற அளவில் தான் குறைகிறது என நகை பிரியர்கள் வேதனை தெரிவித்த நிலையில், மாலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை மாலையில் மேலும் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் மாலையில் ரூ.1,600 குறைந்து ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் மாலையில் ரூ.200 குறைந்து ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன?

கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரே அடியாக கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது. இதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி சென்னையில் ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை நிலவரம்:

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (இன்று மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (இன்று காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)
31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280

27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200

16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200

12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600

8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960

4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+