Gold Rate Today: தங்கம் விலை சரிந்தது.. விநாயகர் சதுர்த்தி நாளில் நகை பிரியர்கள் குஷி!
சென்னை: தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிரடி சரிவு
11 ஆம் தேதி காலையில் தங்கம் அதிரடியாக குறைந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்ட்டது. ஆனால், அதே நாள் மாலையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்டம்பர் 12 ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.15 விலை உயர்ந்து ரூ.14,170க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
14.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,00 (இன்று)
13.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
12.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,240 (மாலை)
11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (காலை)
10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040
9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600
1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760


Click it and Unblock the Notifications
