Gold rate Today: இறங்கு முகத்தில் தங்கம் விலை.. 4வது நாளாக வந்த குட்நியூஸ்.. இன்றைய ரேட் என்ன
சென்னை: தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.66,480ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ச்சியாக 3 நாட்களாக தங்கம் விலை இறங்கு முகத்தில் உள்ளது. இதனால் சற்று மகிழ்ச்சியடைந்துள்ள நகைப் பிரியர்கள், இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது மார்ச் 21-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.66,160க்கு விற்பனையானது. வரலாறு காணாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை குறையத்தொடங்கியதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குறையத் தொடங்கிய தங்கம் விலை
மறுநாளும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், வாரத் தொடக்க நாளான நேற்று விலை குறையுமா இல்லை மீண்டும் ஏறுமுகத்தில் சென்று விடுமா என்ற திகிலுடன் தங்க மார்க்கெட் இருந்தது. ஆனால், மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்றும் தங்கம் விலை சரிந்தது.
அதாவது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,215க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்துள்ளது. தங்கம் விலை இன்றும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இன்றைய தங்கம் விலை என்ன
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ச்சியாக 4 வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65,720க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.240 குறைந்து ரூ.65,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,215 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.30 குறைந்து, ரூ. 8,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 66,480க்கு சென்ற தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாட்களாக குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகு
ரஷ்யா- உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் சென்றது. அதன்பிறகு விலை சற்று குறையத்தொடங்கியிருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனினும், அடுத்த ஏப்ரலில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஏனெனில் அமெரிக்கா ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து பரஸ்பர வரி விதிப்பை தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரித்து விலை உயரக்கூடும் என்றும் நிபுணர்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது.
தங்கம் விலை நிலவரம்:
25.03.2025(இன்று): ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025: ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025: ஒரு சவரன் ரூ.65,840
22.03.2025: ஒரு சவரன் ரூ.65,840
21.03.2025: ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025: ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025: ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025: ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025: ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025: ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025: ஒரு சவரன் ரூ.65,760












Click it and Unblock the Notifications