தரமான ட்விஸ்ட்.. விடாமல் உயரும் தங்கம் விலை.. 7 மாதங்களில் எதிர்பார்க்காத சம்பவம்.. இப்படி ஆகிடுச்சே
சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.18,000 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி ரூ.57,200க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.75,040க்கு விற்பனையாகிறது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,993 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,160 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,550 ஆகவும் உள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை
இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,00,000 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போது, தங்கத்தின் விலை ₹96,500 - ₹98,500 என்ற அளவில் உள்ளது.
ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, உள்ளூர் தங்கம் விலைகள் தொடர்ந்து அதிகரித்து, குறுகிய காலத்தில் 10 கிராமுக்கு ₹96,500 முதல் ₹98,500 வரை வர்த்தகமாகி, 2025 இரண்டாம் பாதியில் ₹98,500 முதல் ₹1,00,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் உலகளாவிய விலைகள் குறைந்தாலும், உள்நாட்டுத் தங்கம் விலைகள் ஜூன் மாதத்தில் 0.6% உயர்ந்தன. இதற்கு ரூபாய் மதிப்பு 0.2% பலவீனமடைந்தது காரணமாக. ஆனால் மே மாதத்தில் இறக்குமதி $2.5 பில்லியனாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் $3.1 பில்லியனாக இருந்தது. நகைக்கான தேவை பலவீனமாகவே உள்ளது, அதே நேரத்தில் முதலீடு தொடர்பான கொள்முதல் வலுவாக இருந்தது. அதாவது மக்கள் இதை அணிகலனாக வாங்குவது குறைவாக உள்ளது. ஆனால் முதலீடாக அதாவது பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸின் கமாடிட்டி பிரிவு தலைவர் கிஷோர் நார்னே, தங்கத்தின் விலைக்கு உச்ச வரம்பு இல்லை.. அது லிமிட்டே இல்லாமல் உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கணித்துள்ளார்.
தங்கம் விலை உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக தடைகள், பணவீக்கம் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை குறித்த கவலைகள் காரணமாகவே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய கொள்கை மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது காணப்படுகிறது. குறுகிய காலத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $3,200 என்ற நிலையை சந்திக்க நேரிடலாம் என்று நார்னே கணிக்கிறார். இருப்பினும், சிறிய சரிவுகள் ஏற்பட்டால், அதை தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது நீண்ட கால அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 5-20% தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த சொத்துக்களை வைத்திருக்க வேண்டும். பல்வேறு முதலீடுகளை வைத்திருப்பவர்கள் தங்கத்தை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கிஷோர் நார்னே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications