Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து இருந்தது. இன்று வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்து இருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. திடீரென உச்சத்தை தொடுவதும் பின்னர் அப்படியே சரிவதுமாக இருந்து வருகிறது. எனினும் ஏழை மக்கள் கனவிலும் நினைத்து பாராத அளவுக்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு நிற்கிறது.

Gold Price Surges in Chennai Sovereign Rate Jumps by Rs 400

தங்கம் விலை திடீர் உயர்வு

இருந்தாலும் தினம் தோறும் தங்கம் விலை குறையாதா என அன்றைய தின நகை ரேட்களை கவனித்து வருகின்றனர். கடந்த 12 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1.14 லட்சத்துக்கு விற்பனை ஆன நிலையில் திடீரென ஷாக் கொடுக்கும் விதமாக ஒரே நாளில் ரூ.9 ஆயிரம் அதிகரித்து நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதுவரை லேசான ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை அன்று ஒரே நாளில் உச்சம் தொட்டது.

அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்படி நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு 400 குறைந்து இருந்தது. சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ.1,18,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240 (இன்று)
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480

20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640

11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+