Gold Price Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. கதி கலங்கும் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தங்கம் விலை (Gold Price Today), இந்த மாதம் 5 ஆம் தேதியில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தினம் தினம் ரூ.2,000 என்ற அளவில் உயர்ந்து நகை பிரியர்களை மீண்டும் கதிகலங்க வைத்துள்ளது. நேற்றும் காலையில் சரிந்து இன்ப அதிர்ச்சி தந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இன்று விலை குறையுமா என எதிர்பார்த்த நகைபிரியர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டு நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மீண்டும் அதிர்ச்சி தரும் தங்கம் விலை
பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்வதும், இடையிடையே சில நாட்களில் சரிவதும் காண முடிகிறது. குறிப்பாக இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று சர்ப்ரைஸ் கொடுகும் விதமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையானது. தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் விலை வீழ்ச்சி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்து ஷாக் கொடுத்தது. காலையில் சவரனுக்கு ரூ.1,480 குறைந்த நிலையில் மாலையில் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,13,600-க்கு விற்பனையானது.
இன்றைய ரேட் என்ன?
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.20 அதிகரித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த வாரத்தில் இருந்து திருமண விஷேசங்கள், பண்டிகை நாட்கள் என வரிசையாக வரத்தொடங்கும் என்பதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதனால், தங்கம் விலை நிலவரம் மக்களிடையே உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாளான இன்றும் தங்கம் விலை அதிகரித்து இருப்பது நகை பிரியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760 (இன்று)
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,600
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760.


Click it and Unblock the Notifications
