Gold Price Today: இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று மீண்டும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.560 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் ரூ.240 குறைந்துள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1.15 லட்சத்திற்கு விற்பனை ஆன நிலையில் 6 ஆயிரம் சரிந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் ரூ.57 ஆயிரமாக இருந்த தங்கம் விலை இந்த ஆண்டு ரூ.1 லட்சத்தை தொட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் 1.30 லட்சம் என புது உச்சம் தொட்டது.

நேற்று தங்கம் விலை உயர்வு
ஆனால் ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 1.08.2026 அன்று ஒரு சவரன் ரூ.1,05,760 என்ற அளவுக்கு சரிந்தது. ஆனால் மீண்டும் தாறுமாறாக உயரத் தொடங்கியது. பின்னர் சரிந்த தங்கம் விலை கடந்த 1.09.2026 அன்று ஒரு சவரன் ரூ.1,15,080 -க்கு விற்பனை ஆனது.
அதன்பிறகும் ஏற்றம் கண்ட தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.24 லட்சம் வரை சென்றது. ஆனால் மீண்டும் தற்போது தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.560 உயர்ந்து, ரூ.1,09,680க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சரிந்தது தங்கம், வெள்ளி விலை
இந்த நிலையில் நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போன்று இன்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்து இருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (இன்று)
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080
1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.


Click it and Unblock the Notifications
