Gold Price Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,680 குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று தடாலடியாக சரிந்துள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.800 குறைந்தது. இதனால் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்து ரூ.1,09,320-க்கு விற்பனை ஆவது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் 11 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
கடந்த ஒரு ஆண்டாகவே தங்கம் விலை தினந்தோறும் ட்விஸ்ட் கொடுத்து வந்தது. தினம் தினம் உச்சம் தொட்டு வந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டுக்குள் ரூ.1 லட்சத்தை தொட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் 1.30 லட்சம் என வரலாற்றில் முதல் முறையாக புது உச்சம் தொட்டது.
அதன்பிறகு தங்கம் விலை குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து சரிவதும் பின்னர் ஏறுவதும் என ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் பெரிய அளவில் புது உச்சம் தொடாமல் இருந்தது. கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் சரிந்துகொண்டே வந்தது. கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி தங்கம் விலை ரூ.1,05,760 என்ற அளவுக்கு சரிந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்று பெரிய அளவில் குறைந்தது
எனவே மீண்டும் தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி செல்லும் என எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. தொடர்ச்சியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த மாதம் 24 ஆம் தேதி மீண்டும் ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதனால் மீண்டும் உயருமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சரியத் தொடங்கியது. அதன்படி கடந்த இரு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து சவரனுக்கு ரூ.1,12,080-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று பெரிய அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது.
மாலையிலும் ரூ.800 சரிந்தது
இன்று காலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.235 குறைந்து ரூ. 13,765-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலையில் மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது. மாலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,09,320-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (இன்று மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,120 (இன்று காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080





Click it and Unblock the Notifications
