Gold Price Today: தங்கம் விலை இன்று தடாலடியாக சரிந்தது.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது! இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) இன்று மீண்டும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.880 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று சற்று குறைந்து நிம்மதி அளித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மின்னல் வேகத்தில் சென்ற தங்கம் விலை இந்த ஆண்டு பெரிய அளவில் உயராமல் இருந்து வருவது நகை பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

Gold Price Today Gold prices plummeted today dropping by 800 per sovereign What is today rate

தங்கம் விலை குறைந்தது

கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை ஆனது. பிப்ரவரியில் 1.30 லட்சம் என புது உச்சம் தொட்டது. ஆனால் அதற்கு பிறகு ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் இருந்து வருகிறது. அதிலும் கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயரவில்லை.

கடந்த 1.08.2026 அன்று ஒரு சவரன் ரூ.1,05,760 என்று இருந்தது. ஆனால் மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 1.09.2026 அன்று ஒரு சவரன் ரூ.1,15,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

இன்றைய ரேட் என்ன?

தொடர்ந்து சரிந்தபடி வந்த தங்கம் விலை நேற்று தடாலடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.880 அதிகரித்தது. நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.1,09,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1,10,200-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 100 குறைந்து ரூ.13,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்து இருப்பது நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,400 (இன்று)
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320

30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,10,120 (காலை)

27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080

21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080

1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+