Gold Price Today: ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. மீண்டும் ஜெட் வேகம் எடுக்கும் ரேட்!
சென்னை: கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்து அதிர்ச்சி தந்தது. அதுவும் காலை மாலை என இரண்டு வேளையும் தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சி தந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. தினம் தினம் குறைந்து வந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் உற்சாகம் அடைந்து வந்தனர். அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வது, அமெரிக்க வங்கி வட்டி விகித எதிர்பார்ப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. மேலும் கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விலை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்ததால் வாங்குவோரிடம் உற்சாகம் நிலவியது.

இன்றும் உயர்ந்த தங்கம் விலை
ஆனால் திடீர் அதிர்ச்சியாக நேற்று தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. காலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது. பின்னர் மாலை நேரத்தில் மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு மேலும் ரூ.640 அதிகரித்ததால் ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூன் 27) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் சென்னையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
27.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,960 (இன்று)
26.06.2026 - ஒரு சவரன்ரூ.1,06,400 (நேற்று மாலை)
26.06.2026 - ஒரு சவரன்ரூ.1,05,760 (நேற்று காலை)
25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120
24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800
23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480
22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)
17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000














Click it and Unblock the Notifications