Gold Price Today: மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. ஒரே நாளில் ரூ.600 அதிகரிப்பு
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த வாரம் முழுக்க உயர்ந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் நேற்றும், நேற்று முன் தினமும் பெரிய அளவில் குறைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.600 அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் இன்று எந்த வித மாற்றமும் இல்லை.
தங்கம் விலை எப்போது கூடும், எப்போது குறையும் என்றே சொல்ல முடியாத அளவுக்கு தினம் தினம் ஷாக் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட சவரனுக்கு ரூ.50 ஆயிரம் அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தங்கம் விலை
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டில் இது ஒரு லட்சத்தை தொட்டது. கடந்த ஜனவரி கடைசியில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்டது. இப்படியே போனால் தங்க நகைகளை இனி கனவில் தான் வாங்க முடியுமோ என நகை பிரியர்கள் கவலையடைந்தனர்.
ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் அமெரிக்கா போரின் காரணமாக தங்கம் விலை சரியத் தொடங்கியது. அதுவரை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் குறைந்துகொண்டே வந்தது. கடந்த மாதமும் குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை ஏற்றத்துடனேயே இருந்தது. தினமும் தங்கம் விலை அதிகரித்தே வந்தது.
2 நாட்களாக சரிந்த தங்கம் விலை
இந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமையும் தங்கம் விலை அதிகரித்தது. இதனால் இனி மீண்டும் தங்கம் விலை உயருமோ என நகை பிரியர்கள் அச்சப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது.
நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ. 13,125-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மளமளவென சரிந்தது. நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்து, ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.13,155க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 75 அதிகரித்து ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் நேற்று எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840 (இன்று)
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.


Click it and Unblock the Notifications
