Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் இங்கும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,845 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,15,440க்கு விற்பனை ஆனது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கம் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது என சொல்லலாம். அந்த அளவுக்கு தங்கம் விலை மளமளவென உயர்ந்து சாமானிய மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டி விடுமோ என அச்சப்பட்ட நகை பிரியர்களுக்கு இனி எங்கே ஒன்றரை லட்சத்தை கடந்துவிடுமோ என அச்சப்பட வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

gold price Akshaya Tritiya gold gold rate

தங்கம் விலை

கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அச்சங்கள் காரணமாக தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதிய முதலீட்டாளர்கள், பெருமளவில் கொள்முதல் செய்தனர். இருப்பினும், தற்போது நிலைமை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை குறைந்து வருகிறது.

நேற்று முன் தங்கம் விலை எந்த வித மாறுதலும் இல்லாமல் விற்பனை ஆன நிலையில் நேற்று மீண்டும் தங்கம் குறைந்து இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 400 குறைந்தது. இதனால் நேற்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,440-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,430-க்கு விற்பனை ஆனது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நம் நாட்டிலும் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.

அதிரடியாக சரிந்தது

எதிர்பார்க்கப்பட்டது போலவே இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சென்னையில் ரூ.1845 குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை ஆனது. இதனால் நகை பிரியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களில்..

05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+